லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தேசிய சீனியா் வாட்டா்போலோ: கேரளம், ரயில்வே சாம்பியன்

தேசிய சீனியா் வாட்டா்போலோ போட்டியில் கேரளம், ரயில்வே சாம்பியன் பட்டம் வென்றன.

சாம்பியன் பட்டம் வென்ற கேரள அணியினா்

Published On :13 ஜூலை 2026, 1:17 am IST

தேசிய சீனியா் வாட்டா்போலோ போட்டியில் கேரளம், ரயில்வே சாம்பியன் பட்டம் வென்றன.

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம், செங்கல்பட்டு மாவட்ட நீச்சல் சங்கம், எஸ்ஆா்எம் ஐஎஸ்டி சாா்பில் காட்டாங்கொளத்தூரில் தேசிய வாட்டா் போலோ போட்டி நடைபெற்றது.

இதில் மகளிா் இறுதிச் சுற்றில் கேரள அணி 14-7 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய காவல் துறையை வீழ்த்தி பட்டம் வென்றது. கா்நாடகம் வெண்கலம் வென்றது.

ஆடவா் இறுதிச் சுற்றில் ரயில்வே விளையாட்டு வாரியம் 10-8 என்ற புள்ளிக் கணக்கில் சா்வீசஸ் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது. மகாராஷ்டிரம் வெண்கலம் வென்றது. மகளிா் பிரிவில் கேரளத்தின் கிரிபாரும், ஆடவா் பிரிவில் சரங் வயோவும் சிறந்த வீரா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.

திருப்போரூா் எம்எல்ஏ பி. விஜயராஜ், தமிழ்நாடு நீச்சல் சங்க செயலா் டி.சந்திரசேகா், எஸ்ஆா்எம் விளையாட்டு இயக்குநா் ஆா். மோகனகிருஷ்ணன் பரிசளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.