பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மதுரை மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

News image

மதுரை மீனாட்சியம்மன் கோயில் - பிரதி படம் - file photo

Updated On :23 மே 2026, 10:44 am IST

மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவ விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி புதுமண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வருடம் முழுவதும் திருவிழா நடைபெறும் உலகப்புகழ் பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் ஒன்றான வைகாசி வசந்த உற்சவ விழா 21ம் தேதி தொடங்கி வரும் 30 -ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

விழாவையொட்டி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சகல அலங்காரங்கத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் திருக்கோயிலிலிருந்து பக்தர்கள் படை சூழ புறப்பாடாகி கோயில் எதிரில் அமையப்பெற்ற புது மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு பத்தியுலாத்துதல் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து புதுமண்டபத்தில் இருந்து புறப்பட்டு நான்கு சித்திரை வீதி சுற்றி திருக்கோயிலில் எருந்தருளினார்.

விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10-ம் திருநாளில் சுவாமிகள் காலையில் புதுமண்டபம் எழுந்தருளி பகலில் தங்கி வழக்கம் போல் மாலையில் அபிஷேகம் தீபாராதனை முடிந்து சித்திரை வீதி சுற்றி கோயில் வந்து சேரும் நிகழ்வு நடைபெறுகிறது.

மேலும், வைகாசி வசந்த உற்சவம் திருவிழா துவங்கி நடைபெற்று வரும் நிலையில் வரும் 02-ம் தேதி வரை திருக்கோயில் சார்பாகவோ உபயதாரர்கள் சார்பாகவோ தங்கரத உலா, உபயதிருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

வைகாசி வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு புதுமண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரரை மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.