லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முத்தாரம்மன் கோயிலில் 1008 லட்டுகள் கொண்டு அர்ச்சனை!

முத்தாரம்மன் திருக்கோயிலில் 1008 லட்டுகள் கொண்டு அர்ச்சனை செய்தது பற்றி..

Mutharamman Temple

முத்தாரம்மன் கோயில்

Published On :17 ஆகஸ்ட் 2026, 11:47 am IST

நெல்லை கொக்கிரகுளம் முத்தாரம்மன் திருக்கோயிலில் அம்மன் முன்பு 1008 லட்டுகள் கொண்டு அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் அமைந்துள்ள குருசாமி சமேத முத்தாரம்மன் திருக்கோவில் ஆடி திருவிழாவையொட்டி அம்மனுக்கு 1008 லட்டு பூஜை நடைபெற்றது. ஆடி திருவிழா கடந்த வாரம் தொடங்கிய நிலையில் அம்மனுக்கு முளைப்பாரி போட்டு நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான லட்டு பூஜை இன்றைய தினம் விமர்சையாக நடைபெற்றது. இதற்காக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் உள்ளிட்டவைகள் நடந்தது தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலமும் அதன்பின்னர் அம்மனுக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து 1008 லட்டுகள் அம்மன் முன்பு படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடர்ந்து சுவாடச உபச்சார மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.