உலகம் மூழ்கிக் கொண்டிருக்கிறது காப்பாற்றுவார் யாருமில்லையா?- பி. சுப்பிரமணியம்; பக்.110; ரூ.120; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017, ✆ 044-2434 2926.
தற்காலச் சூழலில் இயற்கைச் சீரழிவு, பொருளாதாரம் மற்றும் சமூக நெருக்கடிகள் மனிதனை அச்சுறுத்தினாலும், இந்த உலகைக் காக்க எந்தவொரு தனிமனிதனும் அல்லது புறக்காரணியும் தேவையில்லை; மனிதர்களின் நேர்மறையான செயல்களே நமது உலகைக் காக்கும். காலநிலை மாற்றத்துக்கு எதிராக தனிமனிதனாக நாம் செய்யும் மரக்கன்று நடுதல், நெகிழித் தவிர்ப்பு மற்றும் நீர் மேலாண்மை ஆகியவை உலகை மீட்டெடுக்கும்.
சுயநலமும், பேராசையும் கொண்ட மனிதர்களால் விலை மதிப்பில்லாத இயற்கை சீர்குலைவது குறித்து எச்சரிக்கை விடுக்கிறார் நூலாசிரியர். இதில் இடம்பெற்றுள்ள நேரத்தை வெல்லும் உண்மை, இது ஒரு கடைசி அழைப்பே ஆகும், மனிதனின் முடிவற்ற பேராசையின் விளைவு, பூமியின் பிள்ளை அழுகிறது, காற்றின் இரங்கல் ஆகியவை உள்பட 24 அத்தியாயங்களும் இயற்கை நமக்கு வழங்கிய கொடைகள் குறித்தும், அழிந்து கொண்டிருக்கும் இயற்கையைக் காப்பாற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் பேசுகின்றன. காற்று மாசுபாடு, விலங்குகளின் அழிவு, நீரின் தன்மை மாறி வருவது குறித்தும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.
இயற்கை வழங்கிய பொக்கிஷங்களை வரிசைப்படுத்தி, அவற்றைப் பாழாக்கும் சூழல்களில் இருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளன. புவி வெப்பம் உயர்வு, பனிப்பாறை கரைதல், கடல் எழுச்சி, நிலச்சரிவு, வறட்சி, வெள்ளம் ஆகியவை அழிவின் அறிகுறிகள் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்த நூல்.
இனிமேலாவது விழிப்புடன் இருந்து இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த நூல் நமக்கு உரக்கச் சொல்லும் செய்தியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரபாகரன்- எழுச்சியும் வீழ்ச்சியும்

ஞானியார் அடிகள்

மாணவனே, மாணவியே! நீ தலைவன் ஆகணும்!

நாடகமே உலகம் (கட்டுரைகள்)
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

