நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நிழல்களுக்கு எதிராக கலையும் மர்மம்

இளைய தலைமுறையினர் குடும்பத்தினரோடு இணக்கமாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதும் அதை எடுத்துச் செல்லும் முடிவு வியப்பூட்டுகிறது. நாவல் பிரியர்களுக்கு புதிய அனுபவம்.

News image
Updated On :15 ஜூன் 2026, 6:07 pm IST

நிழல்களுக்கு எதிராக கலையும் மர்மம் - உமையாள் ராமநாதன்- (தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்); பக். 182; ரூ. 200; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி) லிட், பெங்களூரு-560 076, ✆ 74185 55884.

எழுத்தாளர் சீத்தலைச்சாத்தனின் மகள்வழி பேத்தி உமையாள் ராமனாதன், துபையில் வசிக்கும், அங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. அவர் எழுதிய இரண்டாவது ஆங்கில நூலை மதுரையில் பிறந்து பெங்களூரில் மேலாண்மைத் துறையில் பணிபுரியும் சித்தார்த்தன் சுந்தரம் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூல் இவரது 20-ஆவது மொழிபெயர்ப்பு. தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து அந்நிய மண்ணில் ஆங்கிலத்தில் திகிலான நாவலை எழுதியிருக்கிறார்.

கனடா நாட்டைச் சேர்ந்த 16 வயது நிரம்பியவளான மேகன் கறுப்பு உருப்பொருள் வடிவில் 'க்ராலர்' என்ற நிழல் ஒன்றை ஒரு தேர்வு அரங்கில் காண்கிறார். அதை அகற்றுவதற்கோ, இல்லாமல் ஆக்குவதற்கோ அவள் முனைப்புக் காட்டும்போது, அந்த நிழல் பின்தொடர்கிறது. அந்த நிழல் அவள் மனதை ஆள்கொண்டிருக்கும் சிந்தனையா? அல்லது உண்மையா? என்ற கேள்விக்கான பயணமே இந்த நாவல்.

மர்மம், திகில், நகைச்சுவை, காதல், புனைவு உள்ளிட்ட பல்சுவை கொண்ட இந்த நாவலில், அடுத்து என்ன நடக்குமோ? என்பதை யூகிக்க முடியாமல் கதை நகர்கிறது. கதையின் நாயகியுடன் பயணிக்கும் லொனலை கென்லிங்கடன், ஜேமி ஜென்வர்ஸ், ஜெஸ்ஸி ஜென்வர்ஸ், லிலித் வெஞ்ஜலை, பியான்கா பாஸ்ட்ரீல், பெனஅஜி பாஸ்ட்ரீல், மிஸ் ஹெவர்டல் ஆகிய கதாபாத்திரங்களுடனான பயணத்துடன் படிக்கும்போது நாமும் பயணிக்கிறோம் என்ற திரில் ஏற்படுகிறது.

கதையின் தொடக்கத்தில், கதாபாத்திரங்கள் குறித்த வர்ணனையைப் படிக்கும்போதே இளம்வயதில் நூலாசிரியரின் எழுத்தோட்டத்தை எண்ணி வியக்கலாம்.

விறுவிறுப்பான நாவலுக்கு இடையே நுகர்வோர் சந்தை, பொருளாதாரம், குடும்ப உறவின் மேன்மை, பெற்றோரின் பாசம் போன்றவற்றையும் அறியலாம்.

காத்து, கருப்பு, ஆவி... என்று பேச்சுகள் உலா வரும் நிலையில், மர்ம உருப்பொருள் குறித்த நாவல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இளைய தலைமுறையினர் குடும்பத்தினரோடு இணக்கமாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதும் அதை எடுத்துச் செல்லும் முடிவு வியப்பூட்டுகிறது. நாவல் பிரியர்களுக்கு புதிய அனுபவம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.