லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உதவி செய்ய ஓடிவரும் ஊர்க்காவல் தெய்வங்கள்

இன்றுவரை அன்பைப் பகிரவும், பயத்தைப் போக்கவும் 'வழிபாடு' என்ற பெயரில் மனிதன் முயன்றுகொண்டிருக்கிறான். அதை 20 விதமான நூல்களின் வழியாகப் பெற்ற சான்றுகளுடன் விளக்கி வியக்க வைக்கிறது இந்த நூல்.

Published On :13 ஜூலை 2026, 6:01 pm IST

உதவி செய்ய ஓடிவரும் ஊர்க்காவல் தெய்வங்கள்- பிரம்மஸ்ரீ வேணுசீனிவாசன்; பக். 304; ரூ. 300; ஸ்ரீ பாரதி பப்ளிகேஷன்ஸ், சென்னை- 600 033, ✆ 99523 35505.

இறை நம்பிக்கை என்பது உணர்வுடன் தொடர்புடையது; எதையும் உணர்வுபூர்வமாக அணுகும் கிராமப்புற மனிதர்களுக்கு இறை நம்பிக்கை அதிகம்; அதன் வெளிப்பாடே கிராமப்புற மக்களின் தெய்வங்களான ஊர்க்காவல் தெய்வங்களின் சக்தி அளப்பரியதாக பேசப்படுகிறது.

சிறு தெய்வங்களாகவும், ஊர்க்காவல் தெய்வங்களாகவும், நாட்டார் வழிபாடாகவும் பிணைந்திருக்கும் தமிழகத்தின் தொன்றுதொட்ட வழிபாடு குறித்தும் அதன் விநோத சடங்குகள் குறித்தும் நூலாசிரியர் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.

ஐயனார் கோயில் தோன்றிய வரலாறு, முத்துப்பட்டன் கதை, பேச்சியம்மன் மற்றும் தாய் தெய்வ வழிபாடு குறித்தும் பதிவிட்ட நூலாசிரியர், அவை எங்கெல்லாம் சிறப்பாக நடைபெறுகின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

வழிபாட்டில் பாம்புகளுக்கு முக்கிய இடம் கிடைக்க ஆசிரியர் கூறும் காரணம் ஓர் ஆராய்ச்சியின் முடிவாகச் சொல்லத் தோன்றுகிறது. அன்பினாலும், பயத்தாலும் தோன்றியதுதான் வழிபாடு என்பதையும், இயற்கைக்கும் விலங்குகளுக்கும் பயந்த மனிதன் அதிகமாகப் பயந்தது பாம்புக்குத்தான் என்கிறார் நூலாசிரியர். அதற்கான காரணத்தையும் கூறுகிறார்.

மூதாதையர் வழிபாடு குறித்த பதிவில் கோயில்கள் தோன்றிய விதத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். நடுகற்கள் மற்றும் பள்ளிப்படை குறித்தும் தெரிந்து கொள்ளும் நமக்கு, காளியை அறிமுகப்படுத்தி சற்று அதிர்வை ஏற்படுத்துகிறார். தொல்காப்பியத்திலிருந்தே காளி வழிபாடு இருந்ததாக அறியமுடிகிறது.

இன்றுவரை அன்பைப் பகிரவும், பயத்தைப் போக்கவும் 'வழிபாடு' என்ற பெயரில் மனிதன் முயன்றுகொண்டிருக்கிறான். அதை 20 விதமான நூல்களின் வழியாகப் பெற்ற சான்றுகளுடன் விளக்கி வியக்க வைக்கிறது இந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.