லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நம் நிம்மதி நம் கையில்

ஐம்பது ஆண்டுகளாக ஆசிரியப் பணியாற்றிய நூலாசிரியர், 'தினமணி' நாளிதழில் எழுதிய 30 கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார்.

Published On :13 ஜூலை 2026, 6:07 pm IST

நம் நிம்மதி நம் கையில்- முனைவர் என். பத்ரி; பக்.136; ரூ.150; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி) லிமிடெட்., பெங்களூரு, ✆ 74185 55884.

ஐம்பது ஆண்டுகளாக ஆசிரியப் பணியாற்றிய நூலாசிரியர், 'தினமணி' நாளிதழில் எழுதிய 30 கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார்.

கிடைக்கும் வேலையை விரும்பினால், வளமுடன் வாழ வழி உண்டு, காலத்தைப் பயன்படுத்தி கற்போம், உழைப்பை மட்டும் நம்புவோம், உழைக்கத் தொடங்குவோம், விமர்சனங்களை வரவேற்போம், அனுபவக் கருவூலம் காப்போம், சேமிப்பு என்றும் வருமானம் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் தன்னம்பிக்கையையும், உழைப்பின் மகத்துவத்தையும் எடுத்துரைக்கின்றன.

எளிய நடையில் அவரது கருத்துகள் உத்வேகத்தை அளிக்கும் வகையில் உள்ளன. 'நம் நிம்மதி என்பது நம் மனம் சார்ந்தது.

அதை வெளியே தேடி அலைய வேண்டியதில்லை. மனக் கவலையின் வெளிப்பாடே நிம்மதியின்மை. சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்ளத் தயங்குபவர்களுக்கு நிம்மதியின்மை ஏற்படுகிறது' என்கிறார் நூலாசிரியர்.

தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்ப்போம், குளிர்கால எச்சரிக்கை, நாய்களைக் காப்போம், கழிப்பறை பயன்பாடு அறிவோம், பெண்கள் போற்றுவோம், ரத்த தானம் உயர்ந்த தானம், இனியும் வேண்டாம் இலவசம் போன்ற நாட்டு மக்களின் நலனுக்கான கட்டுரைகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.

'கட்டுரைகள் அனைத்துமே வாழ்வியல் தொடர்பானவை. தனி மனிதனையும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மேம்படுத்தும் வகையிலான சிந்தனைகளுடன் அமைந்தவை. ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் அதன் முக்கியமான பகுதி இடம்பெறுமாறு செய்யப்பட்டுள்ளது சிறப்புக்குரியது' என்று அணிந்துரையில் திருப்பூர் கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும்போது, நூலின் சராம்சத்தை அறியலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.