லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரிதானதொரு வாழ்க்கை

60 வயதில் நீச்சல் கனவை மீட்டெடுத்து சாதனை படைத்த பெண், குடும்ப வன்முறை, போர்ச் சூழலுக்கு இடையே சாதித்த பெண் எனப் பல்வேறு வாழ்க்கைப் பின்னணி கொண்ட பெண்களின் காட்சிப்படுத்தப்பட்ட தொகுப்புகள் குறித்து எழுத்தாளர் கோகிலா பதிவு செய்துள்ளார்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 7:02 pm IST

அரிதானதொரு வாழ்க்கை- கோகிலா; பக்.128; ரூ. 190; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை- 600 083. ✆ 75500 98666.

சங்க இலக்கியங்கள், இதிகாசங்களில் பெண்களைப் பெருமைப்படுத்தியும், போற்றியும் கதைகளும், காவியங்களும் வரையப்பட்டன. ஆனால், பின்னாளில் சமுதாயத்தாலும், சொந்த குடும்பத்தாராலும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். இதனால், அவர்களது உரிமைகளும், பெருமைகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டன. தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள், சமூக வளர்ச்சி, கலாசார, அறிவியல் மாற்றங்கள் என நாளடைவில் பெண்கள் சமுதாயத்தின் ஒரு பிரிவினர் என இந்த உலகு அறியத் தொடங்கியது.

ஆண்கள் கால் தடம் பதித்த அனைத்து இடங்களிலும் தற்போது பெண்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். தங்களது உரிமைகளைத் தெரிந்து கொண்டு பல்வேறு சமுதாய மாற்றங்களுக்கு வித்திட்டதுடன், அரசியல், தொழில், கல்வி, ஆராய்ச்சி என பல பரிமாணங்களில் அவர்கள் தடம் பதித்து வருகின்றனர்.

ஆனால், வரலாறு ஆண்களை மட்டுமே பெருமைப்படுத்தி வந்துள்ளது. சமுதாயத்தில் சாதனை அல்லது மாற்றத்தை ஓர் ஆண் நிகழ்த்தினால், அவருக்குக் கிடைக்கும் அங்கீகாரம், மரியாதையை பெண்கள் நிகழ்த்தினால் இந்த சமுதாயம் அவர்களுக்கு அளிக்க மறுக்கிறது.

இருப்பினும், சமுதாயத்தில் முத்திரை பதித்த பெண்கள், அவர்கள் அதற்குப் பின்னால் சந்தித்த வலிகள், இடர்ப்பாடுகள், அவமானம், இழப்பு, துரோகம் ஆகியவை ஏனோ நமக்கு தெரியாமலும், புரியாமலும் இருந்திருக்கின்றன. உலக வரைபடத்தில் நமக்குத் தெரியாமல் சப்தமில்லாமல் ஏதோ ஓர் இடத்தில் இது போன்ற சாதனை படைத்த பெண்களின் வாழ்க்கையையும், அவர்களது பயணங்களையும் நிஜக் கதாநாயகிகளாக சிலர் ஆவணப்படுத்தியுள்ளனர்.

60 வயதில் நீச்சல் கனவை மீட்டெடுத்து சாதனை படைத்த பெண், குடும்ப வன்முறை, போர்ச் சூழலுக்கு இடையே சாதித்த பெண் எனப் பல்வேறு வாழ்க்கைப் பின்னணி கொண்ட பெண்களின் காட்சிப்படுத்தப்பட்ட தொகுப்புகள் குறித்து எழுத்தாளர் கோகிலா பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.