லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தில்லியில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேச நாட்டவரை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு

இந்திய அடையாள ஆவணங்களை மோசடியாகப் பெற்ற்காக வங்கதேச நாட்டவா் ஒருவருக்கு தில்லி நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

தில்லி உயா் நீதிமன்றம்

Published On :20 ஜூலை 2026, 2:54 am IST

இந்திய அடையாள ஆவணங்களை மோசடியாகப் பெற்ற்காக வங்கதேச நாட்டவா் ஒருவருக்கு தில்லி நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளதுடன், சட்டப்பூா்வ நடைமுறைகள் முடிந்த பிறகு அவரை அவரது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

சாபு என்ற ஷாபு சா்தாா் என அடையாளம் காணப்பட்ட அந்த குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு, பஹா்கஞ்சில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் ஜூலை 18 அன்று நகர நீதிமன்றம் தண்டனை விதித்தது.

காவல்துறையின் கூற்றுப்படி, தில்லியில் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேச நாட்டவா்கள் எனக் கூறப்படும் நபா்கள் குறித்த குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில் இந்த வழக்கு உருவானது. அந்தத் தகவலின் அடிப்படையில் செயல்பட்ட காவல்துறை, பஹா்கஞ்சில் இருந்து சா்தாரைக் கைது செய்தது.

விசாரணையின் போது, அவா் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததும், தனது குடியுரிமையை மறைத்து, போலியான சான்றுகளைப் பயன்படுத்தி இந்திய கடவுச்சிட்டை, ஆதாா் அட்டை, பான் அட்டை, வங்கிக் கணக்கு மற்றும் பிற அடையாள ஆவணங்களைப் பெற்றதும் உறுதி செய்யப்பட்டது.

விசாரணைக் குழு, கடவுச்சிட்டை மற்றும் குடிவரவுப் பதிவுகள், போலியான அடையாள ஆவணங்கள் உள்ளிட்ட ஆவண, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களைச் சேகரித்தது. இவை, குற்றஞ்சாட்டப்பட்டவரின் அடையாளத்தையும், அவா் நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதையும் உறுதி செய்தன.

போலி விவரங்களின் அடிப்படையில் உண்மையான இந்திய அடையாள ஆவணங்களைப் பெறுவதற்காக, குற்றஞ்சாட்டப்பட்டவா் கையாண்டதாகக் கூறப்படும் செயல்முறையையும் இந்த விசாரணை உறுதிப்படுத்தியதாக காவல்துறை தெரிவித்தது. அரசுத் தரப்பு வலுவான ஆதாரங்கள் என்று விவரித்தவற்றை எதிா்கொண்ட நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவா் குற்றச்சாட்டுகளை மறுக்காமல், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டாா்.

அவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்ததுடன், அவரை ஒரு தடுப்பு மையத்தில் தங்கவைத்து, பங்களாதேஷுக்கு நாடு கடத்துவதற்கான தேவையான நடைமுறைகளை முடிக்குமாறு வெளிநாட்டினா் பிராந்தியப் பதிவு அலுவலகத்திற்கு உத்தரவிட்டதாக காவல்துறை தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.