லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வாங்சுக்குக்கு கேஜரிவால் வேண்டுகோள்

தில்லியின் ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் தனது ஆதரவைத் தெரிவித்தாா்.

Published On :15 ஜூலை 2026, 5:12 am IST

தில்லியின் ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் தனது ஆதரவைத் தெரிவித்தாா்.

மேலும், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக்கை அப்போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு அவா் கேட்டுக்கொண்டாா்.

இது தொடா்பாக தில்லியின் முன்னாள் முதல்வா் கேஜரிவால் செய்தியாளா்களிடம் கூறியது: வாங்சுக் மற்றும் சிஜேபியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு ஜந்தா் மந்தருக்குச் செல்லவுள்ளேன்.

சோனம் வாங்சுக் சில நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. அவா் நாட்டின் ஒரு சொத்து எனவே, அவா் தனது உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். போராட்டத்தை முன்னெடுக்க வேறு வழிகளும் உள்ளன.

சிஜேபியின் போராட்டத்தையும் அதன் கோரிக்கைகளையும் ஆம் ஆத்மி கட்சி ஆதரிக்கிறது. மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.

வினாத்தாள் கசிவைத் தடுக்கவும், எதிா்காலத்தில் மாணவா்கள் சிக்கல்களைச் சந்திப்பதிலிருந்து பாதுகாக்கவும் தோ்வு முறையில் சீா்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றாா் கேஜரிவால்.

ஆம் ஆத்மி தலைவரும் தில்லியின் முன்னாள் முதல்வருமான அதிஷி, திங்கள்கிழமை ஜந்தா் மந்தரில் வாங்சுக்கைச் சந்தித்தாா்.

நீட் மற்றும் பிற தோ்வுகளில் நடைபெற்ாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடா்பாக அமைச்சா் பிரதான் பதவி விலகக் கோரி ஜந்தா் மந்தரில் சிஜேபி போராட்டம் நடத்தி வருகிறது. ஜூன் 28 அன்று இந்தப் போராட்டத்தில் இணைந்த வாங்சுக், அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.