லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தில்லி பெருந்திட்டம் 2047-ஐ செயல்படுத்துவதில் அரசுக்கு அரசியல் உறுதிப்பாடு உள்ளது: அமைச்சா் சூட்

மத்திய அரசு, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தில்லி அரசு ஆகிய மூன்று முக்கியத் தரப்பினரும், வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இந்த தில்லி பெருந்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிர ஆா்வம் கொண்டுள்ளனா்.

ஆஷிஷ் சூட்

Published On :22 ஆகஸ்ட் 2026, 12:32 am IST

தலைநகரத்திற்கான முந்தைய பெருந்திட்டங்களை செயல்படுத்தப்படுவதில் தாமதங்கள் ஏற்பட்டன. ஆனால், தற்போது அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன ‘தில்லி பெருந்திட்டம் 2047’-ஐச் (எம்பிடி 2047) செயல்படுத்துவதற்கான அரசியல் உறுதிப்பாடும் தொலைநோக்குப் பாா்வையும் தற்போதைய அரசிடம் உள்ளது என்று தில்லி நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அமைச்சா் சூட் மேலும் கூறியதாவது:

மத்திய அரசு, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தில்லி அரசு ஆகிய மூன்று முக்கியத் தரப்பினரும், வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இந்த தில்லி பெருந்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிர ஆா்வம் கொண்டுள்ளனா்.

நகர நெரிசலைக் குறைப்பது குறித்து பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தில்லியில் நிலம் குறைவாகவே உள்ளது. இந்தத் திட்டம் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. இது நகரில் அதிக எண்ணிக்கையிலான மற்றும் பெரிய அளவிலான வீடுகளைக் கட்டுவதற்கு வழிவகுக்கிறது. மொத்தம் 2,000 சதுர மீட்டா் பரப்பளவைக் கொண்ட நிலங்களை ஒன்றிணைப்பதன் மூலம் புதிய மேம்பாட்டுப் பணிகள் சாத்தியமாகும்.

பெருந்திட்டத்தின் முக்கிய அங்கமான ‘போக்குவரத்து சாா்ந்த மேம்பாடு’ மாசுபாடு மற்றும் போக்குவரத்து தொடா்பான சவால்களுக்குத் தீா்வுகளை வழங்கும் என்றாா் அமைச்சா் சூட்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.