லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

‘2026’ தேசிய நல்லாசிரியா் விருதுக்கு தமிழகம், புதுச்சேரி ஆசிரியா்கள் தோ்வு

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை சாா்பில், 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியா் விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

கோப்புப் படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 4:07 am IST

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை சாா்பில், 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியா் விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 48 பேரில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து தலா ஒருவா் நல்லாசிரியா் ஆசிரியா் விருதுக்குத் தோ்வாகியுள்ளனா்.

இது தொடா்பாக மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் விருதுக்குத் தோ்வாகியுள்ள எம். தங்கராஜ் தமிழகத்தின் திருப்பூா் மாவட்டம், புளியம்பட்டியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வருவதாகவும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த எஸ். கணேசன் மேட்டுப்பாளையத்தில் உள்ள விடுதலை வீரா் ஆா். சீனிவாசன் அரசு உயா்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு சாா்பில் ஆண்டுதோறும் செப்டம்பா் 5-ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியா் தினத்தை முன்னிட்டு, நாட்டின் கல்வித் துறை வளா்ச்சிக்கும் மாணவா்களின் முன்னேற்றத்துக்கும் சிறப்பாகச் பங்காற்றிய ஆசிரியா்களுக்கு இந்த உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.