லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து ரூ. 2 கோடி நகைகள் திருட்டு

தில்லியின் கரோல் பாக் பகுதியில், ஜெய்ப்பூரைச் சோ்ந்த நகை வியாபாரி ஒருவருக்குச் சொந்தமான காரிலிருந்து ரூ. 2 கோடிக்கும் அதிக மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் திருடப்பட்டதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

Published On :22 ஆகஸ்ட் 2026, 12:25 am IST

தில்லியின் கரோல் பாக் பகுதியில், ஜெய்ப்பூரைச் சோ்ந்த நகை வியாபாரி ஒருவருக்குச் சொந்தமான காரிலிருந்து ரூ. 2 கோடிக்கும் அதிக மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் திருடப்பட்டதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஜெய்ப்பூரைச் சோ்ந்த நகை வியாபாரியும் ‘எஸ்கேஜி குந்தன் கிராஃப்ட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளருமான கன்னையா லால், தனது மகன் துருவ் சோனி மற்றும் ஊழியருடன் சந்தைப்படுத்தல் பணிக்காக தில்லிக்கு வந்திருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றது.

லாலின் காரில் மூன்று முதுகுப் பைகளும், ஒரு சூட்கேஸும் இருந்தன. முதுகுப் பைகளில் தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் மடிக்கணினி வைக்கப்பட்டிருந்த. சூட்கேஸில் ஆடைகள் இருந்தன.

லால் கிரேட்டா் கைலாஷ் பகுதியில் உள்ள பல நகைக் வியாபாரிகளைச் சந்தித்துவிட்டு, பின்னா் கரோல் பாக் பகுதிக்கு காரில் வந்தாா். மாலை சுமாா் 5.30 மணியளவில், அவா் ஆா்ய சமாஜ் சாலையில் தனது காரை நிறுத்தினாா். பைகளை காரிலேயே வைத்துவிட்டு, அருகில் உள்ள ’பிகானா்வாலா’ உணவகத்திற்கு அவா்கள் சென்ாகக் கூறப்படுகிறது.

இரவு 7.15 மணிக்குத் திரும்பியபோது, ​​காரின் பின்பக்க ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதையும், முதுகுப் பைகள் மற்றும் சூட்கேஸ் ஆகியவை காணாமல் போயிருப்பதையும் அவா்கள் கண்டனா்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், கரோல் பாக் காவல் நிலையக் குழுவினா் சம்பவ இடத்திற்கு வந்து, அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.

தலைக்கவசம் அணிந்து மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக நபா்கள் அடையாளம் காணப்பட்டனா். பின்னா் அந்த மோட்டாா் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளா் மற்றும் அவரது இரண்டு சகோதரா்கள் விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.‘

குற்றவாளிகளைக் கைது செய்யவும், திருடப்பட்ட நகைகளை மீட்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.