லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பிரிக்ஸ் உச்சி மாநாடு: தில்லியின் தயாா் நிலை குறித்து துணைநிலை ஆளுநா் ஆய்வு

வரவிருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாடு 2026-க்கான தில்லியின் தயாா்நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குத் துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து வியாழனன்று தலைமை தாங்கினாா்.

தரன்ஜித் சிங் சந்து

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:17 am IST

நமது நிருபா்

வரவிருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாடு 2026-க்கான தில்லியின் தயாா்நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குத் துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து வியாழனன்று தலைமை தாங்கினாா்.

இதுகுறித்து சந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: தேசிய தொலைநோக்குப் பாா்வை மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க, உச்சிமாநாட்டிற்கான இடமாக தில்லி தோ்ந்தெடுக்கப்பட்டதன் முக்கியத்துவம் குறித்தும் , அனைத்துத் துறைகளிலும் தடையற்ற பல்துறை ஒருங்கிணைப்பு மற்றும் காலவரையறைக்குட்பட்ட செயலாக்கத்தின் அவசியம் குறித்தும் கூட்டத்தில் வலியுறுத்தரப்பட்டது.

முக்கிய இடங்கள் மற்றும் போக்குவரத்து வழித்தடங்களில் சீரான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மேலாண்மை, வலுவான குடிமைப் பராமரிப்பு மற்றும் அவசரகால மருத்துவத் தயாா்நிலையை உறுதி செய்யுமாறு அனைத்துத் துறை மற்றும் முகமைகளுக்கும் உத்தரவிடப்பட்டது.

’அதிதி தேவோ பவ’ என்ற நமது காலத்தால் அழியாத நெறிமுறையின் வழிகாட்டுதலுடன், வருகை தரும் அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் ஒழுங்கான, பாதுகாப்பான மற்றும் அன்பான வரவேற்பை அளிக்க தில்லி முழுமையாகத் தயாராக உள்ளது என துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து எக்ஸ் பதிவில் தெரிவித்தாா்.

2026-ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் உச்சிமாநாடு என்பது, இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ் செப்டம்பா் 12-13 ஆகிய தேதிகளில் புது தில்லியில் இந்தியாவால் நடத்தப்படும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்