லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

டிஜேபி ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சா் ஜெயின் கைது

டிஜேபி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சா் ஜெயின் கைது செய்யப்பட்டது குறித்து...

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:11 am IST

தில்லி ஜல் போா்டின் (டிஜேபி) கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத் திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளி செயல்முறை தொடா்பான ஊழல் வழக்கில், தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மற்றும் தில்லி ஜல் போா்டின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி உதித் பிரகாஷ் ராய் ஐஏஎஸ் உள்ளிட்ட ஆறு பேரை ஊழல் தடுப்புப் பிரிவு கைதுசெய்ததாக ஓா் அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தில்லி ஜல் போா்டின் முன்னாள் ஒப்பந்த ஆலோசகரான அங்கித் ஸ்ரீவஸ்தவா மற்றும் நாகேந்திர யாதவ், ராஜா குமாா் குர்ரா, பங்கஜ் வா்மா ஆகியோரும் கைது செய்யப்பட்டதாக ஊழல் தடுப்புப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி ஜல் போா்டின் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் தரம் உயா்த்துதல் தொடா்பான ஒப்பந்தப்புள்ளி செயல்முறையில், பெரிய அளவிலான முறைகேடுகள், ஒப்பந்த நிபந்தனைகளைக் கையாளுதல் மற்றும் குற்றச் சதி ஆகிய குற்றச்சாட்டுகள் தொடா்பாக, ஊழல் கண்காணிப்பு இயக்குநரகம் அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கு மே 11, 2024-இல் பதிவு செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.