லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வெய்யிலால் சருமப் பிரச்னையா? ஐஸ் க்யூப் தெரபி செய்யுங்கள்!

கோடையில் சருமப் பிரச்னைகளுக்கு இயற்கையான தீர்வு பற்றி...

summer beauty tips

கோப்புப் படம் - ENS

Published On :28 மே 2026, 4:09 pm IST

கோடை வெய்யில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைந்தாலும் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு வெய்யிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த கோடையில் சருமத்தைப் பராமரிப்பது என்பது சவாலான காரியம்தான். அந்த வகையில் கோடை வெய்யிலில் சருமப் பிரச்னைகளுக்கு ஐஸ் க்யூப் (ஐஸ் கட்டி)உதவும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வெய்யில் காரணமாக, சருமம் கருமையாக பொலிவிழந்து காணப்பட்டால் ஐஸ் க்யூப் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். சிலருக்கு அதிக உணர்திறன் கொண்ட சருமமாக இருந்தால் நேரடியாக ஐஸ் கட்டியை வைக்காமல் துணியில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

இது சரும எரிச்சலை, வீக்கத்தைத் தடுக்கும் தன்மை கொண்டது என்பதால் வெய்யிலுக்கு இதமாக இருக்கும். மேலும் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

இதேபோல ரோஸ் வாட்டர், கற்றாழை, வெள்ளரிக்காய் போன்ற பொருள்களையும் பயன்படுத்தலாம். மஞ்சளுடன் தயிர் அல்லது பால் சேர்த்து பயன்படுத்தலாம்.

இவற்றில் உங்களுடைய சருமத்திற்கு ஏற்ற ஏதேனும் ஒரு பொருளைத் தேர்வு செய்து அந்தச் சாறை /கலவையை ஐஸ் க்யூப் பெட்டியில் ஊற்றி வைத்து கெட்டியானபிறகு, தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தலாம். கோடை காலம் என்பதால் குளிர்ச்சி சருமத்துக்கு இதமாக இருக்கும்.

இந்த பொருள்கள் எல்லாம் சரும எரிச்சலுக்கும் தீர்வாக இருக்கும். சருமம் புத்துணர்ச்சி பெறும்.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

Summary

Ice cube therapy to beat summer skin problems

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.