- அன்னா ஜோஸ்
உடல் இயக்கம் அதிகம் இல்லாததாலும் உட்கார்ந்தே வேலை செய்வதாலும் ஏற்படும் உடல் பாதிப்புகள் என்னென்ன? இவற்றைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இந்த காலத்தில் கணினி முன் வேலை, குழந்தைகளுக்கு இணையவழி வகுப்புகள், பொழுதுபோக்காக என கணினி, ஸ்மார்ட்போன்கள், டிவி என திரைகளின் பயன்பாடு இப்போது அனைத்து தரப்பினரிடையே அதிகரித்துவிட்டது.
இந்நிலையில் இடைவெளி விட்டு திரை சாதனங்களைப் பயன்படுத்துவது பிரச்னைகளைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஏனெனில் ஸ்மார்ட்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதும் கணினித் திரைகளைத் தொடர்ந்து பார்க்கும்போதும் தசைகள் மற்றும் முதுகின் கீழ் உள்ள டிஸ்க்குகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஆலுவா ராஜகிரி மருத்துவமனையின் முதுகெலும்பு மற்றும் எலும்பியல் துறைத் தலைவர் டாக்டர் கே. வேணுகோபால் மேனன் இதுபற்றி கூறுகையில்,
"உடல் இயக்கமின்மையால் இரண்டு முக்கிய பிரச்னைகள் ஏற்படுகின்றன. முதுகெலும்பைத் தாங்கிப் பிடிக்கும் முதுகுத் தசைகள் படிப்படியாக பலவீனமடைந்து சுருங்கிவிடும். அடுத்து உடல் இயக்கத்தைச் சார்ந்திருக்கும் திசுக்களும் பாதிக்கப்படும். இதனால் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும்.
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் மிகக் குறைவான உடல்நல அபாயங்களே இருந்தாலும் இது உடல் இயக்கமின்மை அல்லது உடற்பயிற்சி இல்லாததால் மறைமுகமாக பல பிரச்னைகளை உண்டாக்கும்" என்றார்.
நன்கு கை,கால்களை அசைத்து நடக்கும் ஏரோபிக் நடைப்பயிற்சி உடல் இயக்கம் மட்டுமின்றி குழந்தைகளின் நினைவாற்றல், அறிவு சார்ந்த திறனை அதிகரிப்பதாக 2018ல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ்ஹெல்த் நிறுவனத்தின் ஆலோசகரும், எலும்பியல் துறை, முதுகெலும்பு அறுவைச் சிகிச்சை நிபுணருமான டாக்டர் ரஞ்சித் உன்னிகிருஷ்ணன்,
"ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் முதுகெலும்பில் அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு உடல் இயக்கமே சிறந்த தீர்வாகும். தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களைப் பொருத்தவரை, நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் உடலுக்கு அசைவு கொடுக்க வேண்டும். எழுந்து நடக்க வேண்டும். நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது முதுகெலும்பு விறைக்கும். அது இறுக்கமான தசைகளுக்கும் பலவீனமான முதுகுக்கும் வழிவகுக்கிறது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 -3 நிமிடங்கள் உடலுக்கு சிறு அசைவு கொடுப்பது பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து நிமிடங்கள் வரை இடைவெளி எடுத்துக்கொள்வது நல்லது. இது முதுகு வலியைத் தடுக்க உதவும். இருக்கையில் இருந்து எழுந்து நிற்பது, நடப்பது, தோள்பட்டையை அசைப்பது, கழுத்தை அசைப்பது, உட்கார்ந்துகொண்டே உடலைத் திருப்புதல் போன்ற எளிய பயிற்சிகளைச் செய்யலாம். இதற்கெல்லாம் பெரிதாக நேரம் தேவைப்படாது. நீங்கள் வேலை செய்துகொண்டிருக்கும்போது இடையே இதனைச் செய்வதை மட்டும் மறக்கக்கூடாது" என்கிறார்.
Summary
Computer Work: A 5-Minute Break Every Hour Is Essential to prevent back pain
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!

கணினி, ஸ்மார்ட்ஃபோன் அதிகம் பயன்படுத்துபவரா?

கணினி வேலை செய்வோர் மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் ஏற்படும் பாதிப்பு! ஏன்?

30, 40களிலேயே மூட்டு வலியா? ஏன்? என்ன செய்ய வேண்டும்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


