மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

விஜய் பிறந்தநாள் புகைப்படம்! த்ரிஷா பதிவால் புகழடைந்த கேக் வகைகள்!

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படத்தைப் பகிர்ந்த த்ரிஷா பதிவால் புகழடைந்த கேக் வகைகள் பற்றி..

News image

முதல்வர் விஜய் - நடிகை த்ரிஷா - From Instagram

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்பட்டது. ஆனால், ஜூன் 23ஆம் தேதி இரவு, நடிகை த்ரிஷா பகிர்ந்த பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்கள் மிகுந்த வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நேற்று முழுக்க த்ரிஷாவின் பதிவில் 00.00 என்று குறிப்பிட்டிருந்தது எதைக் குறிக்கிறது, அதில் இருக்கும் நீல நிறக் கண் எமோஜி கண் திருஷ்டிக்காக வைக்கப்படுவதா என் சமூக வலைத்தங்கள் முழுக்க பேசப்பட்டு வந்தது.

அது மட்டுமா? இன்றும் இதுபற்றித்தான் விதவிதமான பேச்சுக்கள் வந்துகொண்டிருக்கின்றன. விஜய் புகைப்படமே ஒரு செய்யறிவால் உருவாக்கப்பட்ட படம் என்று கூட கருத்துகள் பகிரப்பட்டு அது குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

அதனூடே, த்ரிஷா ஏன் ஐந்து விதமான கேக்குகளை வைத்திருந்தார் என்ற கேள்வி எழுந்து, அவர் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக விஜய் உடன் பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறார். தற்போது ஐந்தாவது பிறந்தநாளை ஒன்றாகக் கொண்டாடுவதால்தான் அதனைக் குறிக்கும் வகையில் ஐந்து கேக்குகள் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான கேக்குகள். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான கேக்குகள். ஒன்று போல மூன்று கேக்குகள் வைக்கப்பட்டிருக்கிறதே அது கொன்சு நிறுவனத்தின் டிராமிசு வகை கேக்குகளாம்.

இந்த டிராமிசு வகை கேக்குகளுடன், மாம்பழ வெண்ணிலா கேக் சென்னையைச் சேர்ந்த கடையிலிருந்தும், ஸ்ட்ராபெரி ஒயிட் சாக்லேட் கேக் சென்னையில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற கேக் நிறுவனத்திடமிருந்தும் வந்திருப்பதாகவும் கூட கண்டுபிடித்து பதிவிடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் பதிவுகளால் கேக் நிறுவனங்களுக்கு அதிக கேக் ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றனவாம். அதுவும் பெரும்பாலும் த்ரிஷா கொடுத்த அதே கேக்குகள்தான் நாள்தோறும் கிட்டத்தட்ட 50 வரை விற்பனையாகிறதாம்.

மற்றொன்று மேங்கோ கேக். ஐந்து கேக்குகளில், மஞ்சள் நிறத்தில் இருக்கிறதே, அதுதான். வழக்கமான கேக் போன்று தயாரிக்கப்பட்டு அதன் மீது உண்மையான மாம்பழத் துண்டுகளை சேர்த்து நிறைவு செய்கிறார்கள் இந்த வகை கேக்கை. தற்போது நாடு முழுவதும் இந்த வகைக் கேக்குக்குத்தான் அதிக டிமேண்டாம்.

இந்த மேங்கோ கேக் செய்வது எப்படி? அதனை எங்கே வாக்கலாம் என்பது போன்ற விடியோக்கள்தான் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதாவது நல்ல தரமான மாம்பழத்தைக் கூழாக்கி, கேக்குகளுக்கு இடையில் அதனை பரப்பிவிட்டு, இப்படியே கேக் துண்டுகளை அடுக்கி நிறைவாக, அதே மாம்பழக் கூழ் மீது சில துண்டு மாம்பழங்களையும் சேர்த்தால் அருமையான மேங்கோ கேக் தயாராம்.

மாம்பழம் பிடிப்பவர்களுக்கு இந்த கேக்கும் பிடிக்கலாம்.

Summary

Vijay's birthday photo Cake varieties made famous by Trisha's post!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.