தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

என்ன, இனி இன்ஸ்டாமார்ட்டில் எல்பிஜி சிலிண்டர் வாங்கலாமா?

இனி இன்ஸ்டாமார்ட்டில் எல்பிஜி சிலிண்டர் வாங்க முடியும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

எல்பிஜி சிலிண்டர்

எல்பிஜி சிலிண்டர் - video grab

Published On :15 ஜூலை 2026, 5:10 pm IST

இன்ஸ்டாமார்ட் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு, மிக விரைவாக எல்பிஜி சிலிண்டர் விநியோகம் செய்யும் திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது.

இச்சேவை முதலில் பெங்களூருவில் கிடைக்கும்; அங்குள்ள நுகர்வோர் இன்ஸ்டாமார்ட் செயலி மூலம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 10 கிலோ எடை கொண்ட 'எச்பி நவ்யா' என்ற எல்பிஜி சிலிண்டரை ஆர்டர் செய்யலாம். இத்தளத்தில் 5 கிலோ எடை கொண்ட உலோக எல்பிஜி சிலிண்டரும் கிடைக்கும்.

எங்களிடம் சிலிண்டர் வாங்குவோர், ஏற்கனவே எல்பிஜி சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை, மாணவர்கள், பணியாற்றுவோர், சிறிய குடும்பத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

முதல் முறை சிலிண்டர் வாங்குவோர் புதிய வாடிக்கையாளராகக் கருதப்படுவார். அடுத்த முறை சிலிண்டர் வாங்கும்போது, பழைய சிலிண்டரைக் கொடுத்துவிட்டு நிரப்பப்பட்ட சிலிண்டரைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர்கள் மூலமாகவே இந்தப் பணிகள் கண்காணிக்கப்பட்டு, பயிற்சி பெற்ற ஊழியர்களால், சிலிண்டர் விநியோகம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறை சிலிண்டர் வாங்கும்போது, வாடிக்கையாளர் தங்களது அடையாளத்தை உறுதி செய்யும் படிவங்களை நிரப்ப வேண்டியது இருக்கும்.

Summary

So, can we buy LPG cylinders on Instamart now?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.