பிறவியிலேயே இருதயத்தில் துளை காணப்பட்ட 7 நோயாளிகளுக்கு 7 மணி நேரத்தில் சிகிச்சை அளித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் இருதய பாதிப்புகளில் முக்கியமானது இருதய சுவரில் துளை காணப்படுவது ஆகும். 10 லட்சம் குழந்தைகள் பிறப்பில் 950 பேருக்கு இந்த பாதிப்பு காணப்படுகிறது. இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனையின் இருதயவியல் துறையின் தலைவர் டாக்டர் கே.கண்ணன், பேராசிரியர் சி.மூர்த்தி ஆகியோர் வியாழக்கிழமை கூறியது: இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெஞ்சுப் பகுதியைத் திறந்து அறுவைச் சிகிச்சை செய்யும் முறையே பெரும்பாலும் செய்யப்படுகிறது. ஆனால் அறுவைச் சிகிச்சையின்றி இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, நோயாளியின் வலது காலின் வழியே ஒரு குழாய் செருகப்படும். அதன் வழியாக வலை போன்ற ஒரு சாதனம் செலுத்தப்படும். இந்தக் குழாய் இருதயத்தில் காணப்படும் துளையின் வழியாக மறுபுறத்துக்கு செலுத்தப்படும். அதன் பின்பு குழாயை அகற்றும் வகையில் பின்புறமாக இழுக்கும்போது, அதில் செலுத்தப்பட்டிருந்த வலை போன்ற சாதனம் விரிந்து துளையை அடைக்கும்.
வாழ்நாள் முழுவதற்கும் இந்த சாதனைத்தை அகற்ற வேண்டியதில்லை. நோயாளிகள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளலாம். இந்தச் சிகிச்சை எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 7 நோயாளிகளுககு ஏப்ரல் 10-ஆம் தேதி செய்யப்பட்டது. காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி நேரம் சிகிச்சை நடைபெற்றது. இரண்டவரை வயது குழந்தை முதல் 45 வயதுடையவர் வரை இந்தச் சிகிச்சை செய்யப்பட்டது. ஒரே நாளில் அதிகமானோருக்கு இந்தச் சிகிச்சை செய்யப்பட்டது தமிழகத்தில் இதுவே முதன்முறையாகும் என்றனர்.
தனியார் மருத்துவமனையில் ரூ.3 லட்சம் செலவில் செய்யப்படும் இந்த சிகிச்சை முறை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி? கார்கே - ராகுலிடம் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்: காங்கிரஸ்
தமிழ்நாட்டின் முதல்வராக நாளை பிற்பகல் 3.15 மணிக்குப் பதவியேற்கிறார் விஜய்!

ஆதரவு கட்சித் தலைவர்களுடன் ஆளுநரைச் சந்தித்த விஜய்!

ஆதரவு கட்சித் தலைவர்களுடன் ஆளுநரை சந்தித்த விஜய்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
