செவிலிய பட்டயப்படிப்புக்கான இறுதி கட்ட கலந்தாய்வு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் உள்ள 2,100 இடங்களுக்காக நடைபெற்ற இரண்டு கட்ட கலந்தாய்வின் முடிவில் 71 காலியிடங்கள் ஏற்பட்டன.
இந்த இடங்களுக்கான இறுதி கட்டக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 247 மாணவிகளுக்கும் தனித்தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் அட்டவணைப்படி கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
செவ்வாய்க்கிழமை காலை 9 மணி கலந்தாய்வு தொடங்கும். இதில் பங்கேற்போர் தங்கள் அசல் சான்றிதழுடன் பங்கேற்க வேண்டும் என தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு: www.tnhealth.org
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி? கார்கே - ராகுலிடம் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்: காங்கிரஸ்
தமிழ்நாட்டின் முதல்வராக நாளை பிற்பகல் 3.15 மணிக்குப் பதவியேற்கிறார் விஜய்!

ஆதரவு கட்சித் தலைவர்களுடன் ஆளுநரைச் சந்தித்த விஜய்!

ஆதரவு கட்சித் தலைவர்களுடன் ஆளுநரை சந்தித்த விஜய்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
