லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

என்.ஆர். காங்கிரஸூக்கு ஆதரவு: இந்திய கம்யூனி்ஸ்ட் மறுபரிசீலனை செய்ய அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி, அக்.9: முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸூக்கு இந்திரா நகர் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதிமுக செயலரும் சட்டமன்ற உறு

Published On :29 டிசம்பர் 2023, 12:15 am IST

புதுச்சேரி, அக்.9: முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸூக்கு இந்திரா நகர் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதிமுக செயலரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆ. அன்பழகன் கூறினார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்த ஆட்சியில் கல்வியமைச்சராக இருக்கும் கல்யாணசுந்தரம் ஆள்மாறாட்டம் செய்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இப்போது நடக்கும் இந்திரா நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு கொடுத்து வருகிறது. மற்றொரு புறத்தில் இந்த ஆட்சியாளர்களின் தவறுகளை அந்தக் கட்சி சுட்டிக்காட்டி வருகிறது. இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரட்டை வேடம் போடுவது போன்று இருக்கிறது. அதனால் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வரும் ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாமக குறித்த ஒரு கேள்விக்குப் பதில் அளித்த அன்பழகன், பாமக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருக்கிறதா? அது போன்ற கட்சிகளை நாங்கள் அரசியல் கட்சிகளாக ஏற்றுக் கொள்வதில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.