லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நீதிக் கதைகள்! ஒரு தாயின் தவம்!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.

Published On :18 ஆகஸ்ட் 2026, 1:05 pm IST

ஒருநாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தம் அம்மாவிடமே கொடுக்க வேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாகச் சொல்லிக் கொடுத்தான்.

அந்தக் கடிதத்தை முழுவதும் தனக்குள்ளே படித்துவிட்டு, அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும்படி இப்படிப் படித்தாள்.

"உங்கள் மகனின் அறிவுத் திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது. அவனுக்குக் கற்பிக்கத் திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை. அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்குக் கற்பிப்பது நல்லது" என்று.

அதன்பிறகு தானே தன் மகனுக்கு தனக்குத் தெரிந்ததெல்லாம் சொல்லிக்கொடுத்து பிறகு பழைய புத்தகங்கள் விற்கும் கடையிலிருந்து நிறைய புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அவரையே படிக்கவும் வைத்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார். எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராகவும், கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்.

இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது, அவர் தன் அம்மாவிடம் முன்பு ஒருமுறை பள்ளியிலிருந்து கொண்டு வந்து கொடுத்த கடிதம் எதேச்சையாகக் கண்ணில்பட அதை எடுத்துப் படித்துப் பார்த்தார்.

அதில் இப்படி எழுதி இருந்தது.

"மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்ப வேண்டாம். உங்கள் பிள்ளையால் எங்கள் பள்ளிக்கே கெடுதல் ஏற்படும்" என்று.

இதைப் படித்த எடிசன் கதறி அழுதார். பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

"மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளன் ஆனான்" என்று.

தன் பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்குக் கொண்டு செல்லும். நம்மால் பல எடிசன்களை உருவாக்க முடியும்.

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்.

'மேதைகள் வாழ்வினில்' நூலிலிருந்து.

Summary

A moral story that children should know.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.