
"ஜனநாயகத்தைக் காப்போம் அராஜகத்தை ஒழிப்போம்" சிக்கிமில் பாஜக பேரணி!
சிக்கிமில் பாஜக பேரணி பற்றி..
பாஜக - கோப்புப் படம்
சிக்கிம் மாநில பாஜக பிரிவு "ஜனநாயகத்தைக் காப்போம்" அராஜகத்தை ஒழிப்போம் என்று நாடு தழுவிய பிரசாரத்தின் ஒரு பகுதியாகப் பேரணி ஒன்றை நடத்தியது.
அதிகரித்து வரும் அரசியல் சகிப்புத்தன்மையின்மை, தவறான தகவல்கள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களைச் சிதைக்கும் முயற்சிகளைக் கண்டிக்கும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றது.
சிங்டாமில் உள்ள மாநில பாஜக அலுவலகத்தில் ஒரு பயிலரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிக்கிம் மாநில பாஜக தலைவர் டி.ஆர். தாபா, கட்சியின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநிலம் முழுவதிலுமிருந்து வந்த தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
பேரணி கூட்டத்தில் பேசிய டி.ஆர். தாபா,
தொடர்ச்சியான தேர்தல் தோல்விகள், எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் நம்பிக்கையைப் பெறும் திறன் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும், சுயபரிசோதனை செய்துகொள்வதற்கும் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவதற்கும் பதிலாக, தவறான கருத்துகளைப் பரப்புதல், அரசியல் விரோதப்போக்கு மற்றும் பொது அமைதியின்மையைத் தூண்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் 'சிறப்பு தீவிர திருத்தப் பணி' குறித்து விளக்கிய தாபா, தேர்தல் செயல்முறையை வலுப்படுத்தத் துல்லியமான மற்றும் நம்பகமான வாக்காளர் பட்டியல் மிக அவசியம் என்று குறிப்பிட்டார்.
தவறான தகவல்களுக்கு உண்மைகளைக் கொண்டு பதிலடி கொடுக்கவும், கட்சியின் நிலைப்பாட்டைப் பொறுப்புடன் எடுத்துரைக்கவும், மத்திய அரசின் சாதனைகளையும் முன்னெடுப்புகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அவர் கட்சித் தொண்டர்களை வலியுறுத்தினார்.
ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், ஜனநாயகம் என்பது தேர்தல்களுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை, அது அரசியலமைப்பு நிறுவனங்கள், சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் தீர்ப்பு ஆகியவற்றிற்கு அளிக்கும் மரியாதையைப் பொறுத்தே அமைகிறது.
இந்த பயிலரங்கத்தைத் தொடர்ந்து, 'ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை ஒழிப்போம்' என்ற பிரசாரத்தின் கீழ் பேரணி நடைபெற்றது.
கட்சித் தொண்டர்கள் மாநில அலுவலகத்திலிருந்து சிங்டாம் பாலம் வரை பேரணியாகச் சென்று, முழக்கங்களை எழுப்பியபடி மீண்டும் அலுவலகத்திற்குத் திரும்பினர்.
அரசியல் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கவும், பிளவுபடுத்தும் அரசியலை எதிர்கொள்ளவும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




