பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஐபிஎல் இறுதிப் போட்டி: திருவிழாவாக மாறிய குஜராத்!

குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி குறித்து அனுராக் தாக்குர் கருத்து...

News image

ஐபிஎல் ரசிகர்கள் - பிடிஐ

Updated On :31 மே 2026, 4:47 pm IST

குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி அட்டகாசமானதாக இருக்கும் என அமைச்சர் அனுராக் தாக்குர் இன்று (மே 31) தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செய்தியாளர்களுடன் அனுராக் தாக்குர் பேசியதாவது:

''உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீகான, ஐபிஎல் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திடலில் நடைபெறவுள்ளது. 1,25,000 பார்வையாளர்களுடன் நரேந்திர மோடி கிரிக்கெட் திடலில் இறுதிப்போட்டியை காணவுள்ளது மிகவும் தனித்துவமான அனுபவமாக இருக்கும்.

அத்தனை பேருடன் அமர்ந்திருப்பதை நினைத்துப்பார்த்தாலே பரவசமாக இருக்கிறது. இரு பெரிய அணிகள் மோதவுள்ளதால், இன்றைய போட்டி அட்டகாசமானதாக இருக்கும். இன்றையை அற்புதமான மாலைக்காகவும் இறுதிப் போட்டிக்காகவும் காத்திருக்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் முழு வீச்சில் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இதில் காவல் துறையினரின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளதாக குஜராத் முதல்வர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

2026 ஐபிஎல் இறுதிப்போட்டியையொட்டி ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகருக்கும் பாதுகாப்பையும், சுமூகமான அனுபவத்தையும் கொடுப்பதற்கான முயற்சியில் காவல் துறையினர் முதன்மையாக செயல்பட்டு வருகின்றனர் எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

IPL final will be a blast Anurag Thakur on RCB vs GT clash

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.