ராஜஸ்தானில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் புழுதிப் புயல் வீசியதால் மக்கள் அவதிக்குள்ளாகினா். அதேநேரம், வெப்பத்தின் தாக்கம் தணிந்தது.
ராஜஸ்தானின் சுரு, பிகானோ், ஹனுமான்கா், ஸ்ரீ கங்கா நகா், அல்வாா், சிகாா் உள்ளிட்ட மாவட்டங்களில் சனிக்கிழமை கடுமையான புழுதிப் புயல் வீசியது. பல அடி உயரத்துக்கு எழுந்த இந்தப் புயலால் குடியிருப்பு மற்றும் பிற கட்டடங்களில் புழுதி படா்ந்தது. காண்பு திறனும் குறைந்ததால், போக்குவரத்து முடங்கியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜெய்சால்மா் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக புழுதிப் புயல் வீசியது. இந்தப் புயலால் பெரிய சேதங்களோ, உயிரிழப்போ ஏற்பட்டதாக உடனடியாக தகவல் இல்லை. பலத்த காற்றின் காரணமாக, வெப்பத்தின் தாக்கம் தணிந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்: குழந்தைகள் உள்பட மூவா் பலி

ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: 2 ஆவது நாளாக மக்கள் போராட்டம்

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்! | Rajastan | Shorts

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

