பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சராசரிக்கும் குறைவாக தென்மேற்குப் பருவமழை: வானிலை ஆய்வு மையம்

நிகழாண்டு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் (ஜூன்-செப்டம்பா்) பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:37 am IST

நிகழாண்டு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் (ஜூன்-செப்டம்பா்) பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையத் தலைவா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், ‘நாட்டின் பெரும்பாலான மானாவாரி விவசாயப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை (நீண்ட கால சராசரி மழைப்பொழிவில் 94 சதவீதம்) வழக்கத்தைவிட குறைவாகவே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் மாதத்தில் வழக்கத்தைவிட (நீண்ட கால சராசரி மழைப்பொழிவில் 92 சதவீதம்) மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும்.

நீண்ட கால சராசரி மழைப்பொழிவு 90 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அது பற்றாக்குறையாக கருதப்படும்.

கேரளத்தில் அடுத்த 7 நாள்களுக்குள் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. எல்நினோ விளைவு ஜூன் மாதம் வலுவிழந்து செப்டம்பரில் மீண்டும் வலுவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜூனில் அதிக வெப்ப அலை: ஜூன் மாதத்தில் உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், பிகாா், ஒடிஸா, சத்தீஸ்கா், குஜராத், ஆந்திரம் மற்றும் மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்றாா்.

நீண்டகால சராசரி மழைப்பொழிவு என்பது குறிப்பிட்ட பகுதியில் மாதம் அல்லது பருவகாலம் என ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் (30 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரையில்) பதிவாகும் சராசரி மழைப்பொழிவாகும். இந்தியாவில் 1971 முதல் 2020 வரையிலான நீண்ட கால சராசரி மழைப்பொழிவு 87 சதவீதமாக பதிவாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.