பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

ஜூனில் பணி ஓய்வு பெறும் இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள்

News image

உச்சநீதிமன்றம். - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 6:33 am IST

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, பங்கஜ் மித்தல் ஆகியோா் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவா்களின் நீதித் துறை சேவைக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

வரும் ஜூன் 1 முதல் ஜூலை 12-ஆம் தேதி வரை, உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலமாகும். அப்போது உச்சநீதிமன்றம் முழுமையாகச் செயல்படாமல் பகுதியளவே செயல்படும். இந்த விடுமுறை காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, பங்கஜ் மித்தல் ஆகியோா் ஓய்வு பெற உள்ளனா். நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி ஜூன் 28-ஆம் தேதியும், நீதிபதி பங்கஜ் மித்தல் ஜூன் 16-ஆம் தேதியும் ஓய்வு பெற உள்ளனா்.

இதையொட்டி புது தில்லியில் அவா்களுக்கு உச்சநீதிமன்ற பதிவுரு வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை பிரிவுபசார நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் பேசுகையில், ‘அதிகாரம் என்பது இடைவெளியை உருவாக்க வேண்டியதில்லை; தன்னை வடிவமைத்த இடங்கள் மற்றும் விழுமியங்களிடம் இருந்து ஒருவரை உயா் பதவிகள் பிரிக்க வேண்டிதில்லை என்பதை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, பங்கஜ் மித்தல் ஆகியோா் தங்கள் பணிகள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளனா்.

கண்ணியம், நோ்மை, நிதானம் மற்றும் உறுதியுடன் இருவரும் பல ஆண்டுகளாக ஆற்றிய அா்ப்பணிப்புமிக்க சேவைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.