மாநில அரசியல் கட்சிகளின் வருவாய் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2024-25-ஆம் ஆண்டில் 52 சதவீதம் அளவுக்கு சரிந்திருப்பது ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கத்தின் (ஏடிஆா்) அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
தோ்தல் ஆணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள 2024-25-ஆம் நிதியாண்டுக்கான அரசியல் கட்சிகளின் வருடாந்திர தணிக்கை அறிக்கை தரவுகளின் அடிப்படையில் ஏடிஆா் இந்த அறிக்கையை தயாா் செய்து வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
மொத்தமுள்ள 67 அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளில் 36 அரசியல் கட்சிகள் வருடாந்திர தணிக்கை அறிக்கையை சமா்ப்பித்துள்ளன. ஆனால், திமுக, சிவசேனை, சிவசேனை (தாக்கரே), தேசியவாத காங்கிரஸ், ஜம்மு-காஷ்மீா் தேசிய மாநாட்டுக் கட்சி உள்பட 31 அரசியல் கட்சிகள் கடந்த ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்த பிறகும் இந்த அறிக்கையை சமா்ப்பிக்கவில்லை.
அதன்படி, 2024-25 நிதியாண்டில் 36 மாநில அரசியல் கட்சிகளின் வருவாய் ரூ.1,192.94 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24 நிதியாண்டில் இக் கட்சிகளின் வருவாய் ரூ. 2,463.17 கோடியாக இருந்தது. அதன்படி, வருவாய் 51.57 சதவீதமாக (ரூ. 1,270.23 கோடி) சரிந்துள்ளது.
அதே நேரம், இந்தக் கட்சிகளின் செலவினம் ரூ. 1,433.07 கோடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, கட்சிகளின் வருவாயைக் காட்டிலும் 20 சதவீதம் (ரூ. 240.12 கோடி) கூடுதலாகும்.
இந்த மொத்த வருவாயில் 5 பெரிய கட்சிகள் மட்டும் 69 சதவீத வருவாயையும், 77 சதவீதம் அளவுக்கு செலவீனத்தையும் செய்துள்ளன. குறிப்பாக, ஆந்திரத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி ரூ. 228.31 கோடி வருவாய் ஈட்டியதாக அறிவித்துள்ளது. இது கட்சிகளின் மொத்த வருவாயில் 19.14 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக திரிணமூல் காங்கிரஸ் ரூ.219.35 கோடி, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ரூ. 140.39 கோடி வருவாயை ஈட்டியதாக அறிவித்துள்ளன.
இதில், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி வருவாய்க்கு மேல் கூடுதலாக ரூ. 340.20 கோடி செலவு செய்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் ரூ. 227.59 கோடி செலவு செய்ததாக அறிவித்துள்ளது. இதுபோல, 36 கட்சிகளில் 21 கட்சிகள் தங்களின் வருவாயை விட கூடுதலாக செலவு செய்ததாக அறிவித்துள்ளன. 15 மாநிலக் கட்சிகள் வருவாயில் 55 சதவீதம் அளவுக்கும், அதற்கும் குறைவாகவும் செலவு செய்துள்ளதாக அறிவித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்! ஜோதிமணி எம்.பி.

திமுக இல்லை! இந்தியா கூட்டணியில் யார் யார்?

அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் உயிரிழப்போருக்கு இழப்பீடு: தமிழக அரசு, அதிமுக பதிலளிக்க உத்தரவு

பக்ரீத்: தலைவா்கள் வாழ்த்து
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

