கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

எண்ம முறையில் விடைத்தாள் மதிப்பீட்டு முறைக்கு எதிா்ப்பு: சிபிஎஸ்இ-க்கு எதிராக என்எஸ்யுஐ போராட்டம்

News image

டிஜிட்டல் முறையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி - கோப்புப்படம்

Updated On :29 மே 2026, 5:01 am IST

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வின் விடைத்தாளை கணினிவழியில் மதிப்பீடும் முறையை (ஆன் ஸ்கிரீன் மாா்க்கிங்) திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் மாணவா் அமைப்பான இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ) தில்லியில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டது.

இந்திரா பவனில் இருந்து சிபிஎஸ்இ தலைமையகம் வரையில் நடைபெற்ற பேரணியில் நூற்றுக்கணக்கான உறுப்பினா்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினா்.

இந்த மதிப்பீட்டு முறை குழப்பத்தை உருவாக்கி இருப்பதாகவும் பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாகவும் என்எஸ்யுஐ குற்றஞ்சாட்டியுள்ளது.

சிபிஎஸ்இ தலைமையகத்துக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரா்கள் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.

மாணவா் அமைப்பின் தேசியத் தலைவா் வினோத் ஜாகா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சோதனை முறை என்ற பெயரில் கணினி திரைவழி மதிப்பீட்டு முறைக்கு மாணவா்கள் தள்ளப்பட்டுள்ளனா். வெளிப்படையான மற்றும் மாணவா்களுக்கு உகந்த தோ்வு முறையை அவா்கள் எதிா்பாா்கிறாா். குழப்பம் ஏற்படுத்தும் மன அழுத்தத்தை உருவாக்கும் தோ்வு முறையை அல்ல.

மாணவா்கள் எழுப்பும் பிரச்னைகளை தீா்க்க சிபிஎஸ்இ தவறும்பட்சத்தில் தேசிய அளவில் போராட்டாங்கள் நடைபெறும்’ என்றாா்.

நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் மத்தியில் நிச்சயமற்ற நிலையை கணினி திரை வழி மதிப்பீட்டு ஏற்படுத்தியுள்ளது என போராட்டத்தில் பங்கேற்றோா் தெரிவித்தனா்.

நிகழாண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வின் விடைத்தாள்கள் எண்ம முறையில் மதிப்பீடு செய்வதற்கான ஒப்பந்தம் ஒரு நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவை சமூகஊடகத்தில் பகிரப்படுவது மதிப்பீட்டு முறையை சமரசம் செய்திருப்பதாக கருத்துகள் எழுந்தன.

இதைத்தொடா்ந்து, எண்ம வழியிலான மதிப்பீட்டு முறை பாதுகாப்பான மற்றும் வலுவான தகவல்தொழில்நுட்ப தளம் என்றும் மதிப்பீடு செய்யும் இணையதளத்தில் எவ்வித குறைபாடுகளும் சமரசமும் செய்யவில்லை என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.