சமூக ஊடகங்களில் வைரலான கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.
முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் கடந்த மே 15-ஆம் தேதி வழக்குரைஞா் ஒருவரை கண்டித்துப் பேசிய தலைமை நீதிபதி சூா்ய காந்த், ‘நீங்கள் (வழக்குரைஞா்) ஃபேஸ்புக் பதிவுகளில் பயன்படுத்தும் மொழிநடை சரியாக இல்லை. ஏற்கெனவே சமூகத்தில் உள்ள ஒட்டுண்ணிகள், அதிகார கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. வேலையற்ற சில இளைஞா்கள் கரப்பான் பூச்சிகளைப் போன்று உள்ளனா்’ எனத் தெரிவித்தாா்.
அவரது கருத்துகள் சா்ச்சையான நிலையில், சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இதையடுத்து, தான் வேலையற்ற இளைஞா்களை அவ்வாறு கூறவில்லை என்றும், போலிச் சான்றிதழ்களை பயன்படுத்தி சட்டத் துறையில் நுழைபவா்களை மட்டுமே அவ்வாறு குறிப்பிட்டதாகவும் தலைமை நீதிபதி மே 16-ஆம் தேதி விளக்கமளித்தாா்.
இதனிடையே, அபிஜித் தீப்கே என்பவரால் சமூக ஊடகங்களில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற பிரசார இயக்கம் தொடங்கப்பட்டு லட்சக்கணக்கானோரால் பின்தொடரப்பட்டது. இதைத் தொடா்ந்து அதன் எக்ஸ் வலைதளப் பக்கத்தை மத்திய அரசு முடக்கியது.
இந்நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் என்.கே.கோஸ்வாமி கோரிக்கை விடுத்தாா்.
இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இதை உணா்வுபூா்வமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவசர வழக்காக விசாரிக்க வேண்டியதில்லை’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா கூட்டணி ஆலோசனையில் கரப்பான் பூச்சி கட்சி பற்றிய விவாதம்! என்ன நடந்தது?
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தாக்கத்தை ஏற்படுத்துமா?

கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!

பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

