பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பஞ்சாபில் மர்ம நபர்களால் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை

பஞ்சாபில் மர்ம நபர்களால் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

போலீஸ்.

Updated On :24 மே 2026, 2:46 pm IST

பஞ்சாபில் மர்ம நபர்களால் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள ஹம்ஜா கிராமம் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் உதவி ஆய்வாளரை ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொன்றனர்.

உதவி ஆய்வாளர் தனது சீருடையில் இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உதவி ஆய்வாளரைக் கொன்ற பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனர். துப்பாக்கி குண்டு காயங்களுடன் இருந்த உதவி ஆய்வாளர் ஜோகா சிங்கின் உடல், ஃபதேகார் சுரியன்-மஜிதியா சாலை அருகே கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் சடலத்தை மீட்டு சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜோகா சிங், கணிகே பங்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று போலீஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறிய, அருகிலுள்ள பகுதிகளின் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் சுஹைல் மிர் காசிம் தெரிவித்தார்.

Summary

A Punjab Police assistant sub-inspector was shot dead by two unidentified motorcycle-borne assailants near Hamja village in the Majitha assembly constituency in Amritsar on Sunday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.