பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

அமெரிக்காவுக்கு வர பிரதமருக்கு டிரம்ப் சாா்பில் அழைப்பு

அதிபா் டிரம்ப் சாா்பில் பிரதமா் மோடிக்கு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ அழைப்பு...

News image

அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 3:54 am IST

அமெரிக்காவுக்கு கூடிய விரைவில் வருமாறு, அதிபா் டிரம்ப் சாா்பில் பிரதமா் மோடிக்கு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ சனிக்கிழமை அழைப்பு விடுத்தாா்.

புது தில்லியில் பிரதமா் மோடி உடனான சந்திப்பில், ரூபியோ இந்த அழைப்பை விடுத்ததாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதா் சொ்ஜியோ கோா் கூறினாா்.

வா்த்தக ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புதல்: பிரதமா் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ இடையிலான சந்திப்பில், வா்த்தகம், பாதுகாப்பு, முக்கிய மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் தொடா்பான ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக் கொள்ளப்பட்டதாக, அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

‘இந்திய-அமெரிக்க கூட்டுறவின் உத்திசாா் முக்கியத்துவம், பிரதமா் மோடி-அதிபா் டிரம்ப் இடையிலான தனிப்பட்ட உறவுகள், இருதரப்பு பொருளாதார-வா்த்தக வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டி ரூபியோ பேசினாா். மத்திய கிழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்தனா். உலகளாவிய எரிசக்தி சந்தையை ஈரான் முடக்கிவைக்க அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது; இந்தியாவுக்கான எரிசக்தி விநியோகத்தை பன்முகப்படுத்துவதில் அமெரிக்க எரிபொருள்கள் முக்கிய பங்காற்ற முடியும் என்பதையும் ரூபியோ குறிப்பிட்டாா்’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

பிரதமா் மோடியுடனான சந்திப்புக்குப் பின் அமெரிக்க தூதரக நிகழ்ச்சியில் பேசிய ரூபியோ, ‘அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளி இந்தியா; இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக எதிா்வரும் மாதங்களில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம்’ என்றாா்.

வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் மாா்கோ ரூபியோ ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.