இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

நான் ஒரு கௌரவ கரப்பான்பூச்சி! இளைஞர்களின் சிஜேபிக்கு சோனம் வாங்சுக் ஆதரவு!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சிக்கு லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆதரவு...

News image

கரப்பான்பூச்சி மக்கள் கட்சிக்கு சோனம் வாங்சுக் ஆதரவு... - கோப்புப் படம் | ANI, CJP

Updated On :23 மே 2026, 4:43 pm IST

இளைஞர்களின் எழுச்சி அமைப்பான கரப்பான்பூச்சி மக்கள் கட்சிக்கு லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நாட்டில் வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சி என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் அபிஜித் திப்கே என்பவர் ”கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி)” எனும் சமூக வலைதளப் பக்கத்தைத் தொடங்கினார்.

இந்த கரப்பான் பூச்சி மக்கள் கட்சி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், கோடிக்கணக்கானோர் அதன் சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடரத் தொடங்கினர். இதையடுத்து, இந்த நையாண்டி கட்சி நாட்டில் நிலவும், வேலை வாய்ப்பின்மை, நீட் வினாத்தாள் கசிவு போன்ற விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பியது.

இதனைத் தொடர்ந்து, சிஜேபி மற்றும் அதன் நிறுவனர் திப்கே ஆகியோரின் சமூக வலைதளப் பக்கங்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இளைஞர்களின் எழுச்சியாக அறியப்படும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சிக்கு லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“முதலில், நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். நமது இளைஞர்களின் இத்தகைய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறித்து வருத்தப்படவோ அஞ்சவோ எதுவுமில்லை. அரசு இந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ளவேண்டும். செய்தியைக் கொண்டுவருபவரைக் கொல்ல முயற்சிக்கக் கூடாது. அவரைக் கொன்றாலும், செய்தியை அழிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், இளைஞர்களின் அமைப்பில் இணைவீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சோனம் வாங்சுக், “அதற்கு நான் தகுதிப்பெறவில்லை. நான் வேலையின்றியும் இல்லை, சோம்பேறியாகவும் இல்லை. ஆனால், நான் என்னை ஒரு கௌரவ கரப்பான்பூச்சியாகவே கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Sonam Wangchuk has expressed his support for the Cockroach janata Party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.