சிபிஎஸ்இ முறையில் 12ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்கள் பல்வேறு சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். கணினி முறையில் விடைத்தாள் திருத்தும் பணியால் மதிப்பெண்கள் குறைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், விடைத்தாள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த அதிர்ச்சிக் காத்திருந்தது.
ஆன்லைன் மூலம், விடைத்தாள்களைக் கோரி விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு அவர்களது விடைத்தாள்கள் கிடைக்கப்பெற்றது.
1,27,146 பேர் தங்களது விடைத்தாள் கோரி விண்ணப்பித்திருந்தனர். அவை அனைத்தையும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதில் பதிவிடப்பட்டிருந்த விடைத்தாள்கள் மங்கலாக இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்களது விடைத்தாள்களில், தாங்கள் எழுதிய கையெழுத்தையே எங்களால் படிக்க முடியவில்லை என்று பல மாணவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அதிலும் சிலருக்கு இணையதளம் முழுமையாக செயல்படவில்லை, அதில் விடைத்தாள்களைப் பார்க்கவே முடியவில்லை என்றும், விண்ணப்பித்தவர்களுக்கு நிலை இப்படியிருக்க, இதே முறையில் ஆன்லைனில் ஆசிரியர்கள் எவ்வாறு விடைத்தாளை திருத்தி மதிப்பெண்களை போட்டிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
சில மாணவர்கள், விடைத்தாள் நகல் பெற பணம் செலுத்தினாலும், அது ஏற்கப்படவில்லை. பணம் மட்டும்தான் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்படுகிறதே தவிர, ஒப்புதல் பெறப்படவில்லை. இதுவரை மூன்று முறை பணம் கட்டியும் எங்களக்கு உரிய தகவல் கிடைக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.
ஏராளமான பெற்றோர், தாங்கள் பணம் செலுத்தியும், விடைத்தாள் பெறுவதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெறவில்லை என்று ஸ்க்ரீன் ஷாட்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி வருகிறார்கள்.
மங்களான விடைத்தாள்களைப் பார்த்து எவ்வாறு மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்க முடியும். ஒவ்வொரு விடைக்கும் ரூ.25 செலுத்த வேண்டும் என்று மாணவர்கள் சிபிஎஸ்இ நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இதற்கு சிபிஎஸ்இ நிர்வாகம் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
CBSE students unhappy as they couldn't read what they wrote on the answer sheet
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிளஸ் 2 விடைத்தாள்கள் குளறுபடியில் நடவடிக்கை எடுப்பதாக மத்தியக் கல்வி அமைச்சகம் பதில்: சு. வெங்கடேசன்

ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?

சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

சிபிஎஸ்இ பிளஸ்-2 விடைத்தாள் திருத்தப் பணியில் முழுமையான விசாரணை அவசியம்! - ராமதாஸ் கோரிக்கை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

