கேரள சட்டப்பேரவை உறுப்பினராக முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் பதவியேற்றுக்கொண்டார்.
கேரளத்தில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி முதல்வர் வி.டி. சதீசன் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு கேரள முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வி.டி. சதீசனுடன் 20 அமைச்சர்களும் கடந்த மே 18 அன்று பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், கேரள சட்டப்பேரவையில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பதவிப் பிரமாணம் இன்று (மே 21) நடைபெற்றது.
அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டப்பேரவைக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் தர்மடம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, 3 ஆவது முறையாக தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட பினராயி விஜயன் 19,247 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 7 ஆவது முறை சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Former CM Pinarayi Vijayan took oath as a member of the Kerala Legislative Assembly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: கேரள முதல்வர் விளக்கம்!
வீணாவின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது உண்மைதான்; குறுகிய மனப்பான்மையுடன் காங்கிரஸ்! பினராயி விஜயன்
பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

பினராயி விஜயன் ராஜிநாமா!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


