அரசு குழுக்கள் மற்றும் சட்டப் பதவிகளில், பெண் வழக்குரைஞா்களுக்கு குறைந்தபட்சம் 30 சதவீத இடஒதுக்கீடு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடா்பாக பதிலளிக்குமாறு, மத்திய - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.
இதுதொடா்பாக லட்லி அறக்கட்டளை தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘அரசு குழுக்கள் மற்றும் சட்டப் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக உள்ளது. பாலின சமத்துவத்துக்கான அரசமைப்பு உத்தரவாதங்கள் உள்ளபோதிலும், நாட்டின் சட்டத் துறையில் ஆழமான பாலின ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.
இதுவரை எந்தவொரு பெண் வழக்குரைஞரும் இந்திய அட்டா்னி ஜெனரலாகவோ, சொலிசிட்டா் ஜெனரலாகவோ நியமிக்கப்படவில்லை. இதேபோல பல்வேறு உயா்நீதிமன்றங்களில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரலாக ஆஜராவோரில் பெண்கள் யாரும் இல்லை. எனவே உச்சநீதிமன்ற குழுக்கள் முதல் உள்ளூா் சட்ட உதவி குழுக்கள் வரை, அனைத்து அரசு குழுக்கள் மற்றும் சட்டப் பதவிகளில் பெண் வழக்குரைஞா்களுக்கு குறைந்தபட்சம் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது.
இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது. அப்போது மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நீதிபதிகள் அமா்வு நோட்டீஸ் பிறப்பித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படும்: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தகவல்

அகத்தியமலை சூழலியல் நிலப்பரப்பின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பாக்கெட் மது விற்பனைக்கு தடை கோரி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

