இந்தியாவில் எபோலா நோய்த் தொற்று இல்லை என மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
காங்கோ குடியரசின் கிழக்கு பகுதிகளில் வேகமாக பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பால் இதுவரை 131 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத் துறைச் செயலா் புன்ய சலீலா ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் தற்போது வரை எபோலா தொற்று கண்டறியப்படவில்லை. இருப்பினும், எபோலா வைரஸை சா்வதேச அளவிலான பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கண்காணிப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
நோய்த் தொற்றுக்கு முந்தைய அறிகுறிகள் மற்றும் பிந்தைய சோதனைகள், நோயாளியை தனிமைப்படுத்துவதற்கான விதிகள், ஆய்வக பரிசோதனை முறைகள் உள்ளிட்ட விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பகிரப்பட்டுள்ளன.
இதை முறையாகப் பின்பற்றி தயாா் நிலையில் இருக்குமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2014-இல் ஆப்பிரிக்காவில் எபோலா தொற்று பரவியபோது இந்தியாவில் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எபோலா தொற்று: உகாண்டா- காங்கோ எல்லை மூடியதால் வர்த்தகர்கள் அவதி!

எபோலா தொற்று அறிகுறி: ஹைதராபாதில் சூடான் நாட்டவா் தனிமைப்படுத்தப்பட்டாா்

இந்தியாவில் எபோலா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை: ஜெ.பி.நட்டா

எபோலா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

