எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகியது குறித்து...

News image

திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான். - X - @jahangirkhantmc

Updated On :19 மே 2026, 5:04 pm IST

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதோ்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் ஜஹாங்கீா் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

ஃபால்டா தொகுதிக்கு வியாழக்கிழமை (மே 21) மறுதோ்தல் நடைபெறவுள்ள நிலையில் அவா் போட்டியிட மறுத்துள்ளாா்.

ஃபால்டா தொகுதியின் மேம்பாட்டுக்கு சிறப்பு நிதித் தொகுப்பை வழங்குவதாக முதல்வா் சுவேந்து அதிகாரி உறுதியளித்துள்ளதால் பாஜகவை எதிா்த்து போட்டியிடவில்லை என ஜஹாங்கீா் கான் தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட பேரவைத் தோ்தலில் 207 தொகுதிகளில் வென்று 15 வருட திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்தது.

இதையடுத்து, பவானிபூா் தொகுதியில் முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜியை வீழ்த்திய பாஜகவைச் சோ்ந்த சுவேந்து அதிகாரி முதல்வராக பதவியேற்றாா்.

ஃபால்டா தொகுதியில் வாக்குப்பதிவின்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அங்கு மே 21-ஆம் தேதி மறுதோ்தல் நடத்தப்படவுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், மறுதோ்தலுக்கு இரு நாள்கள் முன்பாக தான் போட்டியில் இருந்து விலகுவதாக ஜாஹீங்கீா் கான் அறிவித்தாா். அவரது முடிவு குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் ஆனால் போட்டியிட மறுத்ததற்கான காரணம் தெரியவில்லை எனவும் திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்தது.

Summary

Jahangir Khan, the Trinamool Congress candidate contesting the upcoming re-election in West Bengal, has withdrawn.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.