சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

60 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கிய ஜுவாலா கட்டா

அரசு மருத்துவமனைகளுக்கு சுமார் 60 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கியுள்ளதாக ஜுவாலா கட்டா(42) குறிப்பிட்டுள்ளார்.

News image

ஜுவாலா கட்டா.

Updated On :16 மே 2026, 5:34 pm IST

அரசு மருத்துவமனைகளுக்கு சுமார் 60 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கியுள்ளதாக ஜுவாலா கட்டா(42) குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் நடிகர் விஷ்ணு விஷால் தம்பதிக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அவர்களின் குழந்தைக்கு மீரா என்று பாலிவுட் நடிகர் அமீர்கான் பெயர் சூட்டினார். இந்த நிலையில் ஜுவாலா கட்டா தனது குழந்தைக்குப் போக எஞ்சிய தாய்ப்பாலை அரசு மருத்துவமனைகளுக்குத் தானமாக வழங்கி உள்ளார்.

அந்த வகையில் சுமார் 60 லிட்டர் தாய்ப்பாலை ஹைதராபாத் மற்றும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கியதாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தானமாகப் பெறப்படும் வெறும் 100 மில்லி தாய்ப்பால், 1 கிலோ எடையுள்ள ஒரு சிறிய குழந்தைக்குப் பல நாட்களுக்கு உணவாக அமையும்.

இந்தத் தானம் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பல குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடும். தாய்ப்பால் தானம் என்பது பாதுகாப்பானது, பரிசோதிக்கப்பட்டது மற்றும் மிகவும் அவசியமானது. மருத்துவ சிக்கல்கள் காரணமாக, தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பல குழந்தைகளுக்கு அவர்களின் தாயின் பால் உடனடியாகக் கிடைப்பதில்லை.

இந்தத் தானமாகப் பெறப்படும் பால், குழந்தையின் ஆரம்பகால முக்கியமான நாள்களில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் ஊட்டச்சத்தையும் வழங்கி, ஒரு முக்கியப் பாலமாகச் செயல்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Jwala Gutta has donated nearly 60 litres of breastmilk to government hospitals in Hyderabad and Chennai after childbirth. The donation could save dozens of children in NICU, her post read.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.