பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 50 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 50 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் - (கோப்புப் படம்)

Updated On :15 மே 2026, 7:39 pm IST

மகாராஷ்டிரத்தில், ஒரே நாளில் சுமார் 50 காவல் துறை உயர் அதிகாரிகள் (ஐபிஎஸ்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி மும்பை காவல் இணை ஆணையர் (குற்றம்) லக்ஷ்மி கௌதம், அம்மாநிலச் சிறப்பு காவல் ஆய்வாளர் ஜெனரலாக (ஐஜி) இடமாற்றம் செய்யப்பட்டார்.

கூடுதல் காவல் ஆணையர் (சட்டம் ஒழுங்கு) சத்யநாராயண் சௌதரி போக்குவரத்து பிரிவின் கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், போக்குவரத்து பிரிவின் கூடுதல் ஆணையராகப் பணியாற்றிய அனில் கும்பாரே சட்டம் ஒழுங்கு பிரிவின் கூடுதல் காவல் ஆணையராகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு காவல் ஆய்வாளர் ஜெனரல் பதவி வகித்த 12த் ஃபெயில் படத்தின் நிஜ வாழ்க்கை அதிகாரி மனோஜ் குமார் சர்மா உள்ளிட்ட 7 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மனோஜ் குமார் சர்மா மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் சட்டம் ஒழுங்கு பிரிவின் கூடுதல் காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

In Maharashtra, approximately 50 senior police officers (IPS) have been transferred in a single day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.