ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு எதிரான மோசடி வழக்கில், அந்த நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ வியாழக்கிழமை சோதனை நடத்தியது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:
பல்வேறு பொதுத்துறை வங்கிகள், எல்ஐசி ஆகியவை ரூ.27,337 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டதாக அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது அளித்த புகாரின்பேரில் சிபிஐ 7 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே 31 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதேபோல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன மூத்த அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்துள்ளது. அவா்கள் 2 பேரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனா்.
அடுத்தகட்ட நடவடிக்கையாக மும்பை, குருகிராம், பெங்களூரில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன முன்னாள் சிஇஓ, சிஎப்ஓ, இயக்குநா்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். இவா்கள் அனைவரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை பணியாற்றியவா்கள். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட்ஏயு பைனான்ஸ் தொடா்புடைய ரூ. 661 கோடி முறைகேடு வழக்கு: சிபிஐ சோதனை

மோசடி வழக்கில் பெண் காவல் ஆய்வாளா் உள்பட இருவரிடம் சிபிஐ விசாரணை
எஸ்பிஐ கடன் மோசடி வழக்கு: ரிலையன்ஸ் முன்னாள் நிா்வாக இயக்குநா் கைது

ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு: மும்பையில் 17 இடங்களில் சிபிஐ சோதனை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

