ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

கேரள முதல்வர் நியமனத்தில் நீடிக்கும் இழுபறி! காங்கிரஸுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

கேரளத்தில் முதல்வர் நியமனம் தொடர்பாக காங்கிரஸுக்கு எதிராக பல்வேறு இடங்களில் விமர்சன வாசகங்கள்

News image

காங்கிரஸுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள விமர்சன வாசகங்கள்

Updated On :13 மணி நேரங்கள் முன்பு

கேரளத்தில் முதல்வர் நியமனம் தொடர்பாக காங்கிரஸுக்கு எதிராக பல்வேறு இடங்களில் விமர்சன வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிபெற்ற நிலையில், புதிய முதல்வர் குறித்து காங்கிரஸில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முதல்வர் போட்டியில் காங்கிரஸின் 3 மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவியதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி 9 நாள்களான நிலையில், இன்னும் மாநிலத்தில் முதல்வர் நியமிக்கப்படவில்லை என காங்கிரஸுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின.

இதனிடையே, முதல்வர் நியமனத்தில் நீடிக்கும் இழுபறி குறித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸுக்கு எதிரான வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ராகுலும் பிரியங்காவும் வயநாட்டை மறந்து விட்டனர், அவர்களால் இங்கு மீண்டும் வெற்றிபெற முடியாது.

கேரள மக்கள் ஒருபோதும் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.

ராகுல் மற்றும் பிரியங்கா இது ஒரு எச்சரிக்கை அல்ல, இந்தத் தவறுக்கு கேரளம் ஒருபோதும் உங்களை மன்னிக்காது என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை காங்கிரஸ் அலுவலகங்கள் இருக்கும் பகுதிகளிலும் ஒட்டியுள்ளனர்.

இதனிடையே, முதல்வர் அறிவிப்பு இன்று வெளியாகவிருந்ததாகவும், சோனியா காந்தி மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதால் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டதாகவும் மாநில காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப் இன்று கூறினார்.

Summary

Appointment of Keralam Chief Minister; Opposition to Congress Intensifies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.