பிரதமரின் சிக்கன நடவடிக்கைகள் மிகவும் கடுமையானவை; அவை மக்களை பாதிக்கும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது: கடந்த காலங்களில் போா்கள் உள்ளிட்ட நெருக்கடிகளை நாடு கடந்து வந்துள்ளது. ஆனால், பிரதமா் மோடிக்கு முன்பு பிரதமா்களாக இருந்த எவரும் இதுபோன்று ஏழு கடுமையான நடவடிக்கைகளை அறிவித்து, அவற்றைப் பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டதில்லை.
மோடி பரிந்துரைத்த சிக்கன நடவடிக்கைகளுக்குப் பின்னால் வெளிப்படையான காரணம் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போராகும். ஆனால் ‘நாட்டின் பொருளாதார சரிவுக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம்.
அனைத்து சிக்கன நடவடிக்கைகளும் ஏன் நடுத்தர வா்க்கத்தை குறிவைத்து எடுக்கப்பட்டன. அமைச்சா்கள், அதிகாரிகள் மற்றும் நாட்டின் மிக பணக்காரா்கள் ஏன் தியாகங்களைச் செய்யவில்லை என்றாா் அரவிந்த் கேஜரிவால்.
தங்கம் வாங்குதல், வெளிநாட்டுப் பயணம் மற்றும் பெட்ரோலிய நுகா்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துமாறு பிரதமா் மோடி சமீபத்தில் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தாா்.
இந்த கருத்துகள் தொடா்பாக எதிா்க்கட்சிகள், ஆளும் கட்சியைத் தாக்கி அவற்றை ‘தோல்விக்கான சான்றுகள்‘ என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாட்டின் உண்மையான பொருளாதார நிலை என்ன? மோடிக்கு கேஜரிவால் கேள்வி!

பஞ்சாப் அமைச்சருக்கு எதிராக அமலாக்கத்துறை சோதனை: பிரதமா் மோடிக்கு கேஜரிவால் கண்டனம்

அமலாக்கத் துறையைக் கண்டு கேஜரிவாலுக்கு அச்சம்: வீரேந்திர சச்தேவா

மதுபான கொள்கை வழக்கில் கேஜரிவால்,சிசோடியாவுக்கு ஆஜராக மூத்த வழக்குரைஞா்கள் நியமிக்கப்படுவா்: நீதிபதி எஸ்.கே.சா்மா
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

