ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைகளில், 4 கர்ப்பிணிகள் மரணம் அடைந்த நிலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடல்களை வாங்க மறுத்து மருத்துவமனை கவனக்குறைவால் பெண்கள் இறந்துவிட்டதாக குடும்பத்தினர் கடும் அதிருப்தியுடன் மருத்துவமனைகளில் அமர்ந்துள்ளனர்.
கோட்டாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி மரணமடைந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது மற்றொரு மருத்துவமனையில் 2 பெண்கள் பலியாகினர். மீண்டும் அரசு மருத்துவமனை ஒன்றில் மேலும் ஒரு கர்ப்பிணி உயிரிழந்துள்ளார்.
மேலும், சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8 பெண்கள் சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கோட்டாவில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெற்ற பெண்களின் நிலைகள் அடுத்தடுத்த நாள்களில் மோசமடைந்து வருகிறது. ஒரு பெண்ணுக்கு கருப்பையில் ரத்தம்கட்டியிருந்ததாகக் கூறி மற்றொரு அறுவை சிகிச்சை செய்து கருப்பையே அகற்றப்பட்டுள்ளது. அப்போதும் நிலைமை மோசமடைந்து அவர் மரணமடைந்துள்ளார்.
இது குறித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளின் மரணங்களுக்கு கவனக்குறைவா? போலி மருந்துகளா? சிகிச்சையில் குறைபாடா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அலட்சியமாகச் செயல்படும் அரசு மருத்துவமனைகள்: சீமான் குற்றச்சாட்டு

சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை சாதனை

ரத்த நாள வீக்கம்: பெண்களின் உயிரைக் காத்த அரசு மருத்துவா்கள்

வெப்பவாத சிகிச்சை: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வசதிகள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

