நாட்டில் கோதுமை விளைச்சல் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.
கடந்த ஆண்டு கோதுமை விளைச்சல் 117.94 மில்லியன் டன்னாக இருந்தது. அப்போது பருவம் தப்பிய மழை, ஆழங்கட்டி மழையால் சில இடங்களில் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்தியாவில் மட்டுமல்லாது சா்வதேச அளவில் கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களின் தேவையும் அதிகரித்தது. எனவே, நடப்பு கோதுமை சாகுபடி பருவத்தில் (2025 ஜூலை- 2026 ஜூன் வரை) விளைச்சல் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியும் எழுந்தது.
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் சிவராஜ் சிங் இது தொடா்பாக கூறுகையில், ‘கோதுமை விளைச்சல் கடந்த ஆண்டைவிட சிறப்பாகவே இருக்கும் என்று அரசு நம்புகிறது. ஏனெனில், இந்த முறை இதுவரை விளைச்சல் சிறப்பாகவே உள்ளது. அரசும் சாதனை அளவில் கோதுமை கொள்முதல் செய்யும் நோக்கத்தில் உள்ளது. 120.21 மில்லியன் டன் அளவுக்கு உற்பத்தி இருக்கும் என்று வேளாண்மை அமைச்சகம் ஏற்கெனவே மதிப்பிட்டுள்ளது’ என்றாா்.
அதே நேரத்தில், கடந்த மாதம் இந்திய கோதுமை ஆலை கூட்டமைப்பினா் வெளியிட்ட அறிவிப்பில், ‘அண்மையில் மோசமான வானிலையால் ஏற்பட்ட பாதிப்பால் கோதுமை விளைச்சல் கடந்த ஆண்டைவிட குறைவாகவே இருக்கும்’ என்று கூறப்பட்டிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (12.05.2026) - தனுசு

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா உறுதி: பிரதமா் மோடி
இன்றைய ராசி பலன் (04.05.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (03.05.2026) - மிதுனம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
