தமிழக முதல்வர் விஜய்க்கு மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார்.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 207 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, தொடர்ந்து 3 முறை ஆட்சி செய்த திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரான மமதா பானர்ஜி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் மமதா குற்றம் சாட்டிய நிலையில் முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என தெரிவித்திருந்தார்.
நாளை மறுநாள் (மே 9-ஆம் தேதி) பாஜக தலைமையிலான அரசு பதவியேற்கவுள்ளதாக அறிவித்த நிலையில், மம்தா பானர்ஜியின் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், மேற்கு வங்க அமைச்சரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி. இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வராக பாஜகவின் சுவேந்து அதிகாரி நேற்று பதவியேற்றார்.
இந்த நிலையில், தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய்க்கு மமதா பானர்ஜி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், “2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள மகத்தான வெற்றிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்களுக்கு எனது அன்பார்ந்த நல்வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறேன்.
இந்தத் தேர்தல், தமிழ்நாட்டு மக்களின் விருப்பங்களையும், நம்பிக்கையையும், ஜனநாயக உணர்வையும் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது. தமிழ்நாடு தனது முன்னேற்றம், மக்கள் நலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பயணத்தை விஜய்யின் தலைமையின் கீழ் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மக்களுக்கு அர்ப்பணிப்புடனும் கடமையுணர்வுடனும் பணியாற்றுவதில் விஜய்யும் அவரது அரசும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
Former West Bengal Chief Minister Greets Tamil Nadu Chief Minister Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழக முதல்வா் விஜய்க்கு புதுச்சேரி முதல்வா் வாழ்த்து

மமதாவிடம் இருந்து திரிணமூலை கைப்பற்றும் ரிதப்ரதா பானர்ஜி! யார் இவர்?

மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக மமதா பானர்ஜி மீது வழக்குப்பதிவு!

தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முன்னாள் முதல்வர் வாழ்த்து!
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
தினமணி செய்திச் சேவை
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan
இணையதளச் செய்திப் பிரிவு

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu
தினமணி செய்திச் சேவை


