கேரளத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள நிலையில், புதிய முதல்வராக யார்? பதவியேற்கப் போவது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கேரளத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் ஜக்கிய ஜனநாயகக் கூட்டணி 102 தொகுதிகளிலும், இடதுசாரி ஜனநாயக முன்னணி 35 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.
இதனைத் தொடர்ந்து, பெரும்பான்மைக்குத் தேவையான 71-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய முதல்வருக்கான போட்டியில் மூன்று பேர் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளத்தின் முதல்வர் பதவிக்கு, காங்கிரஸ் பொதுச்செயளாலர் கே.சி. வேணுகோபால், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கேரளத்தில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் 63 சட்டப்பேரவை உறுப்பினர்களில் கே.சி. வேணுகோபால் முதல்வராகப் பதவியேற்க 47 பேரும், வி.டி. சதீஸனுக்கு 10 பேரும், ரமேஷ் சென்னிதாலாவுக்கு 6 பேரும் ஆதரவளிப்பதாக காங்கிரஸின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வி.டி. சதீஸனுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறப்படுகிறது.
கேரளத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்ய கட்சியின் தலைமைக்கு அதிகாரம் அளித்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய முதல்வர் யார் என்ற தகவல் வருகிற மே 10 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Amid intense discussions over leadership in Kerala, the Congress Legislature Party (CLP) on Thursday passed a resolution authorising the party high command to take the final call on the chief ministerial candidate for the next Congress-led government in the state, party sources said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தின் புதிய முதல்வர் யார்? மும்முனைப் போட்டியில் சிக்கிய காங்கிரஸ்!

கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் காங்கிரஸ்!

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் இளம்பெண் பலி!

கேரளத்தில் பணிபுரியும் தமிழர்களுக்கு நாளை விடுமுறை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
