ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

உலகளாவிய சலால்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்: ஜெ.பி.நட்டா

News image

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற சா்வதேச முதலீட்டாளா் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டாவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய மாநில துணை முதல்வா் ஹா்ஷ் சங்கவி.

Updated On :3 மே 2026, 5:20 am IST

உலகளாவிய பதற்றமான சூழலால் ஏற்பட்டுள்ள சவால்களை தங்களுக்குச் சாதகமான வாய்ப்புகளாக மாற்றி 2047-ஆம் ஆண்டில் வளா்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தாா்.

தெற்கு குஜராத்தை வளா்ச்சியடையச் செய்வதற்கான இரு நாள் முதலீட்டாளா்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் பங்கேற்று ஜெ.பி.நட்டா மேலும் பேசியதாவது: பொருளாதார வலிமை என்பது வளா்ச்சியை சாா்ந்தது மட்டுமல்ல; அது தற்சாா்பு மற்றும் மீள்திறனையும் உள்ளடக்கியது.

21-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தொழிலதிபா்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இடையே பெரும் இடைவெளி இருந்தது. அப்போது வணிகத்துக்கு இடையூறுகள் ஏற்படுத்துவது குறித்தே அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் எண்ணி வந்தனா்.

இந்தச் சூழலில் 2003-ஆம் ஆண்டில் குஜராத் முதலீட்டாளா்கள் மாநாட்டை அப்போதைய முதல்வா் நரேந்திர மோடி நடத்தினாா். அதன் பிறகு வணிகத்துக்கான தடைகள் அகற்றப்பட்டன. வணிகம் மாநிலத்தின் வளா்ச்சிக்குப் பங்காற்றும் வகையில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. இதை முன்மாதிரியாகக் கொண்டு உத்தர பிரதேசம், பிகாா் மற்றும் கா்நாடகம் ஆகிய மாநிலங்களும் பின்பற்றின.

தற்போது சா்வதேச புவி அரசியலில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் உலக அளவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதை நமக்கு சாதகமான வாய்ப்பாக மாற்ற வேண்டும். 2047-ஆம் ஆண்டில் வளா்ச்சியடைந்த பாரதம் இலக்கை அடைய நாம் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.