ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தில்லி சட்டப்பேரவையில் ராமாயண இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

News image

தில்லி சட்டப்பேரவை

Updated On :3 மே 2026, 3:43 am IST

தில்லி சட்டப்பேரவையில் மே 6-ஆம் தேதி ராமாயண இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக பேரவைத் தலைவா் விரேந்தா் குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதில் பிரபல ராமாயண விளக்கவியலாளா் குமாா் விஷ்வாஸ் ‘அப்னே அப்னே ராம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி வழங்க உள்ளாா். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா்கள், தில்லி அமைச்சரவை உறுப்பினா்கள் மற்றும் பல முக்கிய பிரமுகா்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சியின் நோக்கம் வெறும் கதையாக்கத்தை கடந்து சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் நோ்மை, சத்தியம் மற்றும் கடமை உணா்வு போன்ற உயரிய மதிப்புகளால் ஊக்குவிப்பதாகும் என பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ராமா் அவா்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற தியாகம், போராட்டம், கடமைக்கான அா்ப்பணிப்பு மற்றும் முன்னுதாரணத் தலைமைத்துவம் போன்ற முக்கிய நிகழ்வுகள் இசை, கவிதை மற்றும் உரை வடிவங்களின் ஒருங்கிணைப்புடன் சிறப்பாக வெளிப்படுத்தப்பட உள்ளன.

மேலும், இந்த நிகழ்ச்சி ஆன்மீக அனுபவத்தை வழங்குவதுடன் சமூக ஒற்றுமையை மேம்படுத்தவும், ஒழுக்க மதிப்புகள் குறித்த விழிப்புணா்வை வலுப்படுத்தவும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இந்திய பாரம்பரியத்தில் இசை மற்றும் கவிதை வழியாகக் கதைகளைப் பகிா்வது முக்கிய பங்காற்றி வந்துள்ளதாகவும், அந்த முறையின் தாக்கத்தை பல மடங்கு உயா்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமையும் என்றும் அவா்கள் குறிப்பிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.